அல்ஜீரிய ராணுவ விமான விபத்து: 257 வீரர்கள் பலியான சோகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அல்ஜீயர்ஸ்: அல்ஜீரியாவில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் 257 வீரர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்ஜீரியா தலைநகர் அல்ஜீயர்ஸில் இருந்து ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு Il-76 என்ற விமானம் பௌஃபாரிக் விமான நிலையத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் தென்மேற்கு பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்கு சென்று கொண்டிருந்தது.

257 killed in Algerian military plane crash near capital: Report

அந்த விமானம் தெற்கு அல்ஜீரியாவில் உள்ள டின்டஃப் பகுதியில் தரையிறங்க இருந்தது. அப்போது சில நிமிடங்களில் ஆளில்லாத நிலப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 257 வீரர்கள் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விமானத்தில் மொராக்கோவின் மேற்கு சஹாராவின் பிரிவினைவாத அமைப்பின் உறுப்பினர்கள் 26 பேரும் விமானத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

விமானம் நொறுங்கிய இடத்தில் கரும்புகை சூழ்ந்துள்ளது. 14 ஆம்புலன்ஸ்கள், 10 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெறுகிறது. கடந்த 2014-இல் கிழக்கு அல்ஜீரியாவில் ராணுவ விமானம் நொறுங்கியதில் 77 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An Algerian aircraft transporting dozens of troops and equipment went down near an airport at Boufarik less than 20 miles from the capital Algiers. The crash has reportedly left more than 257 people dead.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற