போர் நிறுத்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 27 பேர் பலி
காஸா: 72 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 27 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் கடந்த 3 வாரங்களாக கொடூர தாக்குதலை நடத்தி ஆயிரக்கணக்கான உயிர்களை படுகொலை செய்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் அகதிகளாகி உள்ளனர்.
அப்படி அகதிகளாக அடைக்கலம் புகுந்த பள்ளிக்கூடங்களையும் படுபாதக இஸ்ரேல் விட்டுவைக்கவில்லை. அவற்றின் மீதும் கொடூர தாக்குதல்களை இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச நாடுகள் முன் முயற்சியில் 72 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க இஸ்ரேலும் காஸாவும் ஒப்புக் கொண்டன. ஆனால் இன்று காலை 5 மணிக்கு இந்த யுத்த நிறுத்தம் முறிந்து போனது.
இஸ்ரேல்- ஹமாஸ் இரு தரப்புமே போர் நிறுத்தத்தை மதிப்பதாக முன்னர் கூறியிருந்த போதிலும், அதனை முறித்துக் கொண்டு மீண்டும் யுத்தத்தைத் தொடர்ந்துள்ளன.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மொத்தம் 27 அப்பாவி பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர்.