For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்: இந்தியாவைச் சேர்ந்த 4 செவிலியர்கள் உள்பட 16 பலி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சனா: ஏமன் நாட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 4 செவிலியர்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

ஏடன் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் இந்தியாவைச் சேர்ந்த 4 பெண்கள் செவிலியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கிய ஏந்திய 4 தீவிரவாதிகள் முதியோர் இல்லத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

4-indian-nurses-among-16-dead-gun-attack-on-yemen

முதியோர் இல்லத்தின் பாதுகாவலரை சுட்டுக் கொன்ற அவர்கள், பின்னர் இல்லத்துக்குள் நுழைந்து அங்கு இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அங்கு பணியாற்றி வந்த 4 இந்திய செவிலியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

முதலில் 4 செவிலியர்களை தனியே பிரித்து சுட்டுக் கொன்றனர், பிறகு மற்ற முதியோர்களைக் கையைக் கட்டி நிறுத்தி துப்பாக்கியால் சுட்டு கொலை வெறித்தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
4 Indian nurses were among at least 16 people killed on Friday when gunmen opened fire at an elderly care home in Yemen
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X