Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்ல வேகம்.. பெரிய வெளிச்சம்.. 2 பறக்கும் தட்டுகளை பார்த்தோம்.. விமானிகள் பரபர வாக்குமூலம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பறக்கும் தட்டுகளை பார்த்ததாக விமானிகள் வாக்குமூலம்- வீடியோ

    டூப்லின்: ஏலியன்கள் பயன்படுத்தும் வாகனம் என்று கூறப்படும் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக அயர்லாந்தில் விமானிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இப்போதெல்லாம் ஏலியன்கள் விமானம் என்று அழைக்கபடும் '' யுஎஃப்ஓ (UFO- Unidentified flying object)'' பற்றிய நிறைய ஆராய்ச்சிகள், விவாதங்கள் செய்யப்பட்டு வருகிறது.

    பூமியில் நிறைய பேர் இந்த யுஎஃப்ஓவை பார்த்தாக கூறி இருக்கிறார்கள். இதனால் உலகம் முழுக்க ஏலியன்கள் குறித்த விவாதங்கள் அதிகம் ஆகியுள்ளது. அதே சமயம் இதெல்லாம் கட்டுக்கதை என்று மறுப்பவர்களும் உள்ளனர்.

    [இன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29 செயற்கைக்கோள்.. புதிய சாதனை படைக்கும் இஸ்ரோ!]

    நான்கு விமானிகள்

    நான்கு விமானிகள்

    இந்த நிலையில்தான் அயர்லாந்து அருகே பறந்து கொண்டு இருந்த போது இந்த யுஎஃப்ஓவை பார்த்ததாக விமானிகள் கூறியுள்ளனர். அந்த நேரத்தில் அந்த பகுதியில் வானத்தில் நான்கு விமானங்கள் பறந்து இருக்கிறது. இந்த நான்கு விமானத்தை சேர்ந்த விமானிகளும், அந்த யுஎஃப்ஓவை பார்த்ததாக வாக்குமூலம் அளித்ததுதான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எப்படி இருந்தது

    எப்படி இருந்தது

    இது மிகவும் வேகமாக சென்றதாக கூறியுள்ளனர். மேலும் இதன் வெளிச்சம் மிக மிக அதிகமாக இருந்தது என்றுள்ளனர். மூன்று விமானிகள், 2 யுஎஃப்ஓவை பார்த்ததாக கூறியுள்ளனர். ஒரு விமானி, நான் ஓட்டிய விமானத்திற்கு அருகே மெதுவாக வந்துவிட்டு பின் வேகமாக பறந்துவிட்டது என்றுள்ளார்.

    ஆதாரம் உள்ளது

    ஆதாரம் உள்ளது

    இதற்காக சில ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். விமானத்தின் உள்ளே இருக்கும் கருப்பு பெட்டியின் ஆடியோ பதிவு செய்யும் கருவியில் இதற்கான ஆதாரம் உள்ளது என்கிறார்கள். அந்த யுஎஃப்ஓ அந்த விமானம் அருகே சென்ற போது பெரிய அளவில் சத்தம் எழுப்பியுள்ளது. இந்த வித்தியாசமான சத்தம் அந்த ஆடியோ கருவியில் பதிவாகி உள்ளதாகவும், அதை ஆதாரமாக காட்ட போவதாகவும் கூறியுள்ளனர்.

    இப்படி ஒன்று கிடையாது

    இப்படி ஒன்று கிடையாது

    இதுவரை இப்படி ஒரு சாதனத்தை தங்கள் வாழ்நாளில் பார்த்தது இல்லை என்றும் கூறியுள்ளனர். இந்த யுஎஃப்ஓ ஹைபர் சோனிக் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் சென்றுள்ளது. மனிதர்கள் கண்டுபிடித்த எந்த பறக்கும் சாதனம் செல்லும் வேகத்தை விடவும் இது அதிக வேகத்தில் சென்றுள்ளதாக கூறுகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+