ஜப்பானில் 5.7, அமெரிக்காவில் 5.2 ரிக்டர் அளவில் அதிர்வினை உண்டாக்கிய நிலநடுக்கம்

ஜப்பானின் ஹோன்ஷூ கடற்கரையினை மையப்பகுதியாக கொண்டு உருவாகிய இந்த நிலநடுக்கம் மியாக்கோ நகரிலிருந்து 8கிலோ மீட்டர் தொலைவில் உருவாகி 44 கிலோமீட்டர் வரை அதிர்வினை உண்டாக்கியது. இது பற்றிய தகவல்களை சர்வதேச புவியியல் மையம் வெளியிட்டுள்ளது.
இந்நில அதிர்வின் காரணமாக மியாகோ, யமடா போன்ற நகரங்கள் பெருமளவில் அதிர்வடைந்தன. கட்டிடங்களும், நிலப்பகுதியும் குலுங்கியதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
நில அதிர்வின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். 5.7 என்ற ரிக்டர் அளவில் பதிவான இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம், பொருட்சேதம் ஆகியவை பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
இதேபோல் அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் அரிசோனா நகரங்களிலும் இந்த நிலநடுக்கமானது 5.2 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. ஆனால், இதுவரை இந்நில அதிர்வு பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.