தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.4ஆக பதிவு.. குலுங்கிய கட்டடங்கள்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

தைபே: தைவான் நாட்டில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகி இருந்த நிலையில், தைபேவில் இருந்த ஏராளமான கட்டடங்கள் குலுங்கி இருக்கின்றன. இதுவரை உயிர் பலி எதுவும் இல்லை என்றாலும், பல்வேறு கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தைவான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சியாய் அருகே நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தைபேவில் இருந்த பல்வேறு கட்டடங்களும் குலுங்கி இருக்கின்றன. இந்த நிலநடுக்கம் சியாய் பகுதியில் உள்ள டாபு நகரின் 9.4 கிமீ ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

earthquake taiwan

இதன் காரணமாக தைபேவில் உள்ள சிப் தயாரிக்கும் நிறுவனமான டிஎஸ்எம்சி தொழிற்சாலைகளிலிருந்து ஊழியர்களை வெளியேறினர். இதுகுறித்து தீயணைப்புத் துறை தரப்பில் கூறுகையில், சியாய் நகரில் சிலர் சேதமடைந்த கட்டமைப்புகளில் சிக்கிக் கொண்டனர். இருப்பினும் அவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டதால் எந்த சிக்கலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் எந்தவொரு பெரிய உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால் நிலநடுக்கம் கண்டறியப்பட்ட டாபு பகுதியில், சில கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், சில கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் தீயணைப்புத் துறையினர் தரப்பில், சேதத்தின் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

1906ஆம் ஆண்டு சியாய் அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 1,200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 1999ஆம் ஆண்டு நான்டவ் கவுண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கமே தைவானில் ஏற்பட்ட பேரழிவாகும். இந்த நிலநடுக்கத்தால் மட்டும் 2,500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+