For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கதற விடும் கொரோனா.. ஒரே நாளில் 2527 பேர் உயிரிழப்பு.. குழந்தைகளும் மரணம்.. கதி கலங்கும் பிரேசில்

வைரஸ் தொற்றில் பிரேசில் 3வது இடத்தை பிடித்துள்ளது

Google Oneindia Tamil News

பிரஸ்ஸிலா: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.. மேலும் நேற்று ஒரே நாளில் 83,367 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த நாட்டில் கலக்கம் சூழ்ந்துள்ளது.

தற்போது 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது.. இந்த தொற்று மிக வேகமாக பரவக்கூடியது என்றும் ஆபத்தானது என்றும் கடந்த டிசம்பர் மாதமே விஞ்ஞானிகள் எச்சரித்து விடுத்திருந்தனர்.

ஆனால், இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் சுதாரிக்க தவறிவிட்டன.. இப்போது தொற்று பாதிப்பு விஸ்வரூபமெடுத்துள்ளது..

எங்கு மரண ஓலம்.. கலங்கும் பிரேசில்.. ஒரு நாளில் 1,26,315 பேருக்கு பாதிப்பு.. அதிரவைக்கும் இந்தியா எங்கு மரண ஓலம்.. கலங்கும் பிரேசில்.. ஒரு நாளில் 1,26,315 பேருக்கு பாதிப்பு.. அதிரவைக்கும் இந்தியா

 3வது இடம்

3வது இடம்

கடந்த வருடமும் சரி, இந்த வருடமும் சரி, தொற்றினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடு பிரேசில்தான்.. தற்போது உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளது.

பாதிப்பு

பாதிப்பு

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.. இதை தேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.. நேற்று ஒரே நாளில் மட்டும், 83,367 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.. இதையடுத்து, அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 58 லட்சத்து 98 ஆயிரத்து 558 ஆக உயர்வடைந்து உள்ளது.

கலக்கம்

கலக்கம்

இதுவரை அந்த நாட்டில் 2,527 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்து 391 ஆக உயர்ந்து கலக்கத்தை கூட்டுகிறது. இதைதவிர, 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையிலும் உள்ளனர்...! இந்த தொற்று வயதானவர்களைதான் தாக்குகிறது, இளைஞர்களுக்கு அவ்வளவாக ஆபத்து இல்லை என்ற எண்ணம் பரவலாக இருந்தது.. இப்போது நிலைமை அப்படி இல்லை.

நிபுணர்கள்

நிபுணர்கள்

இளைஞர்கள் உட்பட பச்சிளங்குழந்தைகள், சிறுவர்கள் என அனைத்து தரப்பையுமே இந்த தொற்று தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலும், பிரேசில்தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.. கொரோனாவால் குழந்தைகள் இறப்பது இங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.. இதுவரை கொரோனா பரவத் தொடங்கிய நாள்முதல் இப்போதுவரை 832 குழந்தைகள் தொற்றினால் இறந்துள்ளது.. இவர்கள் எல்லாருமே 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது..!

English summary
83,367 new Coronavirusase per day in Brazil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X