For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன அது? நடுரோட்டில் ராணுவ ஹெலிகாப்டரா? பார்த்ததும் அப்படியே மிரண்ட மக்கள்.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் எந்நேரத்தில் எங்கிருந்து தாக்குதல் தொடுக்கப்படுமோ என்கிற அச்சத்திலேயே அந்நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்நாட்டு ராணுவ போர் ஹெலிகாப்டர் ஒன்று சாலையில் தாழ்வாக பறந்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

தீவிரமடையும் ஏவுகணை தாக்குதல்... இருளில் மூழ்கிய உக்ரைன்.. வேகம் எடுத்த ரஷ்யாவின் அட்டாக்! தீவிரமடையும் ஏவுகணை தாக்குதல்... இருளில் மூழ்கிய உக்ரைன்.. வேகம் எடுத்த ரஷ்யாவின் அட்டாக்!

உக்ரைன் ராணுவம்

உக்ரைன் ராணுவம்

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் மக்கள் பெரும் அச்சத்துடன் ஒவ்வொரு நாட்களையும் கடத்தி வருகின்றனர். இந்நிலையில், ரஷ்யா உக்ரைனில் 15% நிலப்பரப்பை கைப்பற்றி தன்நாட்டுடன் இணைத்துக்கொண்டிருக்கிறது. உக்ரைன் இதற்கு சளைக்காமல் பதில் தாக்குதல் தொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்கையில், உக்ரைன் நாட்டு தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது Mil Mi-24 ரக ராணுவ ஹெலிகாப்டராகும்.

 ஆயுதங்கள்

ஆயுதங்கள்

இந்த வகை ஹெலிகாப்டர்கள் 1972ல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. அப்போதிலிருந்து தற்போது வரை பயன்பாட்டில் இருக்கிறது. இந்த ஹெலிகாப்டர்கள் மொத்தமே உலகம் முழுவதும் 2,648 என்கிற எண்ணிக்கையில்தான் உள்ளன. ரஷ்ய இதனை தயாரித்ததால் அந்நாட்டின் வசம் 75 சதவிகிதமும் மீதமுள்ளவை உக்ரைன் மற்றும் மூன்றாம் நாடுகளிடம் இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக 8 பேர் வரைதான் பயணிக்க முடியும். தவிர 2,400 கி.கி எடையுள்ள பொருட்களையும் இது சுமந்து செல்லும். அதேபோல வேகத்தை பொருத்த அளவில் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 335 கிமீ என்கிற அளவில் சுமார் 450 கி.மீ வரை பயணிக்க முடியும்.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

இதில் ராக்கெட் லாஞ்சர்கள், சிறி ரக ஏவுகணைகள், நவீன ரக துப்பாக்கி ஒன்று, ஏவுகணை தாக்குதலிலிருந்து தப்பிக்க சுழல் குண்டுகள் என அனைத்து வசதிகளும் உள்ளன. ஒருவேளை இந்த ஹெலிகாப்டர் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது விபத்திற்குள்ளானால் பெரும் வெடிப்பு நிகழும் என்று நீங்கள் கருதினால் அது தவறு. இந்த வகை ஹெலிகாப்டர்களில் இதுதான் தனி சிறப்பம்சம். கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உகாண்டாவில் இந்த வகை ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறங்க வேண்டி வந்தது. ஆனால் தரையிறங்க 'ஹெலிபேட்' எனப்படும் சமமான இடம் எங்கும் கிடைக்கவில்லை.

போர் யுக்தி

போர் யுக்தி

வேறு வழியின்றி காட்டுக்கு நடுவே வீரர்கள் இதனை தரையிறக்கினார்கள். இதில் வீரர்களுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தாலும், யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் ஹெலிகாப்டர் சுக்குநூறாக உடைந்துவிட்டது. அந்த அளவுக்கு நம்பகமான ஹெலிகாப்டர்கள்தான் இது. இதனை பயன்படுத்திதான் ரஷ்யாவை உக்ரைன் எதிர்த்து வருகிறது. சரி அதெல்லாம் இருக்கட்டும் சாலையில் ஏன் சென்றது என்று கேட்கிறீர்களா? இது ஒரு பழைய போர் யுக்தி. எதிரி நாட்டின் ரேடாரின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க இவ்வாறு தாழ்வான நிலையில் சாலைகளையொட்டி செல்வது வழக்கம். அதைான் உக்ரைன் பயன்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள அந்நாட்டு ராணுவம் 'உக்ரைன் உங்களை வரவேற்கிறது' என்று கூறியுள்ளது.

சமீப நாட்களாக உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை தொடுத்து வருகிறது. இதனை எதிர்த்து உக்ரைனும் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As the war between Russia and Ukraine is going on, the people of the country are living in fear of an attack from anywhere. In this case, a military war helicopter of the country flew low on the road and left everyone in shock. Videos related to this are now being shared rapidly on social media
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X