For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானத்தில் அங்கப்பிரதட்சணம்.. நடுவானில் திக்திக்.. ஜன்னல்களை உடைக்க முயன்ற பயணி! ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து துபாய் வரை விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்ட சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில பரவி வருகிறது.

அந்த பயணி திடீரென நடைப்பாதையில் படுத்துகொள்வதும், விமானத்தின் நாற்காலிகளை குத்துவதும் என சேட்டைகளை செய்துள்ளார். விமானத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வது போல மெதுவாக அடைந்து சென்று வேடிக்கை காட்டி உள்ளார்.

ஒருவேளை இவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று சக பணிகள் கருதிய நிலையில், அந்த பயணி விமானத்தில் ஏறியபோது சாதாரணமாகதான் இருந்துள்ளார் என்று விமான நிறுவன ஊழியர்கள் கூறியுள்ளனர்.

கவுன் பனேகா குரோர்பதி சீசன் 14.. ரூ 1 கோடியை வென்றார் பிளஸ் 2 படித்த குடும்பத் தலைவி கவிதா சாவ்லா கவுன் பனேகா குரோர்பதி சீசன் 14.. ரூ 1 கோடியை வென்றார் பிளஸ் 2 படித்த குடும்பத் தலைவி கவிதா சாவ்லா

பயணம்

பயணம்

பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து பெஷாவர்-துபாய் PK-283 எனும் விமானம் துபாய் நோக்கி புறப்பட்டுள்ளது. புற்படும் நேரம் எல்லாமும் இயல்பாகவே இருந்துள்ளன. ஆனால் நேரம் போக போக பயணகள் தாங்கள் ஒழுங்காக துபாய் போய் சேருவோமா என்று பயந்துகொண்டே இருந்துள்ளனர். காரணம் சக பயணி ஒருவர்தான். இந்த பயணி வழக்கம்போல மிகவும் அமைதியாக விமானத்தில் ஏறியுள்ளார். ஆனால், நடுவானில் அவர் செய்த சேட்டைகள் சிலருக்கு விமான பயணம் மீதான பயத்தை மேலும் அதிகரிப்பதை போன்று இருந்துள்ளது.

அங்கப்பிரதக்ஷனம்

அங்கப்பிரதக்ஷனம்

அதாவது இந்த பயணி இருக்கைகளையொட்டி உள்ள நடைப்பாதை திடீரென மல்லாக படுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத சக பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளனர். சிலர் அந்த பயணியின் நடவடிக்கைகளை வீடியோ எடுக்க தொடங்கிவிட்டனர். சற்று நேரத்திற்கெல்லாம் விமான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அங்கே வந்து பயணியை எழுப்பி அவரது இருக்கையில் அமரவைத்துள்ளார். மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்திள்ளார். அந்த பயணியும் இதை கேட்டு அமைதியான நிலையில், விமானம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

ஜன்னல்

ஜன்னல்

ஆனால் சிறிது நேரம் கழித்து சட்டையை கழற்றிய அந்த பயணி விமானத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க தொடங்கியுள்ளார். என்னடா இது வம்பு என சக பயணிகள் மீண்டும் தலையை சொறிய தொடங்கியுள்ளனர். சரி இந்த பயணி என்னதான் செய்கிறார் என்று பார்ப்போம் என அனைவரும் அவரையே அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கையில், அந்த பயணி திடீரென விமானத்தின் ஜன்னல்களை காலால் எட்டி உதைத்து திறக்க முயற்சித்துள்ளார்.

பேச்சு வார்தை

பேச்சு வார்தை

அவ்வளவுதான் பயணிகள் அலற, ஒன்றுக்கு நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளனர். அந்த சர்ச்சைக்குரிய பயணியிடம் பேச்சுவார்த்தை நடத்துகையில், பயணி எதுவும் பேசாமல் நின்றுள்ளார். பின்னர் என்ன நினைத்தாரோ ஏது நினைத்தாரோ உடனே விமானத்தின் இருக்கைகளை கைகளால் குத்த தொடங்கிவிட்டார். மீண்டும் ஜன்னல்களை உடைக்க தொடங்கிவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் பயணியின் கை கால்களை பிடித்து தடுத்து நிறுத்தினர்.

 பாதிப்பு

பாதிப்பு

ஒருவேளை இந்த பயண மனநலன் சார்ந்த நோயாளியால் பாதிக்கப்பட்டவராக இருப்பாறோ என்று சந்தேகம் எழுந்த நிலையில், இவர் விமானத்தில் ஏறும்போது சரியாகதான் இருந்துள்ளார் என்பதை சக ஊழியர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் இதர பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

English summary
A video of a passenger traveling on a flight from Karachi to Dubai in Pakistan causing disturbance to fellow passengers is spreading on social media. The passenger suddenly went on pranks like lying down on the aisle and punching the plane's seats. While colleagues thought that he might be mentally ill, the airline staff said that the passenger was normal when he boarded the flight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X