விமானத்தில் இருந்த மனித இதயம்.. படுவேகமாக தரையிறக்கிய விமானிகள்.. நடுவானில் நிகழ்ந்த பரபரப்பு!
அமெரிக்காவில் விமானம் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த மனித இதயத்தால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

கலிபோர்னியா: அமெரிக்காவில் விமானம் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த மனித இதயத்தால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த விமானம் வந்த இடத்திற்கே திரும்ப அனுப்பப்பட்டுள்ளது.
பொதுவாக இதய மாற்று அறுவை சிகிச்சை பெறப்பட்ட இதயங்களை மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் கொண்டு செல்வது மிகவும் கடினமான வேலையாகும். அப்படி ஒரு இதயம், நோயாளி ஒருவருக்காக கொண்டு செல்லப்பட்ட போது பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து வாஷிங்டனில் உள்ள சியாட்டில் விமான நிலையத்திற்க்கு சவுத்வெஸ்ட் விமானம் மூலம் இதயம் ஒன்று பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த இதயம் விமானம் தரையிறங்கிய பின் பார்சல் அலுவலகத்திற்கு கொண்டு வரப்படவில்லை.

உள்ளே இருந்துள்ளது
இந்த இதயம் விமானத்திலேயே இருந்துள்ளது. அதன்பின் அந்த விமானம் டெக்ஸாஸில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்தில் புறப்பட்டு இருக்கிறது. விமானிகளுக்கு விமானம் புறப்பட்டு பாதி தூரம் சென்ற பின்தான் தகவல் தரப்பட்டு இருக்கிறது. இதயம் ஒன்று உள்ளேயே மாட்டிக்கொண்டு இருக்கிறது என்று பின்புதான் தெரிந்துள்ளது.

திருப்பி சென்றனர்
இதையடுத்து விமானம் மீண்டும் சியாட்டில் நோக்கி திரும்பி சென்றது. மொத்தம் 4 மணி நேரம் பயணம் செய்த விமானம் மீண்டும் சியாட்டில் விமான நிலையத்திற்கு சென்றது. விமானத்திற்குள் இருந்த இதயம் பாதுகாப்பாக போதிய மருத்துவ முறைகளின் படி சீல் செய்யப்பட்டு இருந்துள்ளது.

பயணிகள் பீதி
இந்த விஷயம் தெரிந்த பயணிகள் விமானத்தில் பீதிக்கு உள்ளாகினர். சிலர் இந்த சம்பவத்தை நினைத்து பரிதாபம் அடைந்தனர். விமானம் மீண்டும் சியாட்டில் விமான நிலையத்தில் தரையிறங்கிய உடன் வெகுவேகமாக ஆம்புலன்ஸ் மூலம் இதயம் வெளியே கொண்டு செல்லப்பட்டது.

என்ன சொல்கிறார்கள்
ஆனால் இது எங்கு கொண்டு செல்லப்பட்டது என்று விவரங்கள் வெளியாகவில்லை. இது யாருக்காக எடுத்து செல்லப்பட்டது என்றும் கூறப்படவில்லை. ஆனால் இந்த இதயம் பேக் செய்யப்பட்டு 8-9 மணி நேரம் ஆனதால், இது செயல்படாத நிலைக்கு சென்று இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications