For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎஸ் குழப்பத்தால் பெண் சாப்ட்வேர் என்ஜினியரின் கணக்கை முடக்கிய ஃபேஸ்புக்

By Siva
Google Oneindia Tamil News

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் ஐசிஸ்(Isis) என்ற பெயர் கொண்ட சாப்ட்வேர் என்ஜினியரின் ஃபேஸ்புக் பக்கத்தை ஐஎஸ்ஐஎஸ்(Isis) தீவிரவாதிகளின் பக்கம் என்று நினைத்து ஃபேஸ்புக் நிர்வாகம் அதை முடக்கியது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர் ஐசிஸ்(Isis) ஆன்சலீ. சாப்ட்வேர் என்ஜினியர். அவரது முதல் பெயர் அதாவது ஐசிஸ்(Isis) என்பது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின்(Isis) சுருக்கம் போன்று உள்ளது.

A software engineer named Isis says Facebook auto-blocked her account

இந்நிலையில் ஐசிஸின் ஃபேஸ்புக் பக்கம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடையது என நினைத்து அதை ஃபேஸ்புக் நிர்வாகம் முடக்கியது.

இது குறித்து ஐசிஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நான் ஒரு தீவிரவாதி என ஃபேஸ்புக் கருதுகிறது. என் பாஸ்போர்ட்டின் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பியும் அவர்கள் என் ஃபேஸ்புக் கணக்கை ரீஓபன் செய்யவில்லை என்று தெரிவித்திருந்தார்.

ஐசிஸ் இது குறித்து ஃபேஸ்புக் நிர்வாகத்திற்கு மூன்று முறை தகவல் அனுப்பியும் பலன் இல்லை. இந்நிலையில் ஃபேஸ்புக் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,

போலி கணக்கு குறித்த புகார்களை சரிபார்க்கையில் தவறுதலாக ஐசிஸின் கணக்கு முடக்கப்பட்டது. அதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். அவரின் கணக்கு தற்போது செயல்படுகிறது என்றார்.

ஐசிஸ் என்பது பழமையான எகிப்து பெண் கடவுளின் பெயர். அப்படி இருக்கையில் அந்த பெயரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபடுத்துவதா என ஐசிஸ் பெயர் கொண்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

English summary
Facebook administration blocked the account of a software engineer named ISIS, mistaking her name to be the notorious terror outfit ISIS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X