கலிபோர்னியாவில் RRR.. திரையிடப்பட்டது பாதி படம் மட்டுமே.. மீதி படத்திற்கு மேனேஜர் சொன்ன பதில் என்ன?
கலிபோர்னியா: ராஜமவுலி இயக்கத்தில் உலகமெங்கும் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் நாள் காட்சியின் போது கலிபோர்னியாவில் ஒரு தியேட்டரின் போது பாதி படம் மட்டுமே ஒளிபரப்பப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகுபலிக்கு பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கிய பிரம்மாண்டமான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த படம் கடந்த 25 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியானது.
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் என தெலுங்கு சினிமாவின் இரு பெரும் ஸ்டார்கள் நடித்துள்ளனர். இந்த படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரானது. இதுவரை 750 கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டது இந்த படம்.

வெளிநாடுகள்
இந்த படம் வெளிநாடுகளிலும் திரையானது. அதில் கலிபோர்னியாவில் நார்த் ஹாலிவுட்டில் உள்ள சினிமார்க் என்ற தியேட்டரிலும் இந்த படம் திரையிடப்பட்டது. இந்த படம் 5 மொழிகளில் வெளியானதால் கலிபோர்னியாவில் இருக்கும் ரசிகர்கள் ஆர்வமாக முதல் நாள் முதல் காட்சிக்கு சென்றிருந்தனர்.

பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ
டிக்கெட் கொடுத்து பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்க்கும் சந்தோஷத்தில் ரசிகர்கள் தியேட்டருக்குள சென்றனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படம் திரையிடப்பட தொடங்கியது. ரசிகர்கள விசில் சப்தத்துடன் படத்தை ஆரவாரம் செய்து பார்த்தனர். இந்த நிலையில் படத்தின் முன் பாதி வரை திரையிடப்பட்டது.

இடைவேளை
பின்னர் இடைவேளைக்கு பிறகு திரையிடப்படும் என எதிர்பார்த்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அடுத்த பாதி படம் திரையிடவே இல்லை. ஏதாவது தொழில் நுட்ப கோளாறாக இருக்கும், போடுவார்கள், போடுவார்கள் என காத்திருந்து ரசிகர்கள் சோர்ந்து போய்விட்டனர்.

மேனேஜர் சொன்ன பதில்
இதனால் ஆத்திரமடைந்து தியேட்டர் மேனேஜரை கேட்டனர். அப்போது அவர் ஒரு பதில் சொன்னார் பாருங்கள். "இன்னும் படம் இருக்கிறது, ரீலை ஓட்ட வேண்டும் என எங்களுக்கு எந்தவித தகவல்களும் வரவில்லை என்றாராம். இதனால் கடுப்பான ரசிகர்கள், "படம் இன்னும் முடியவில்லை, பாதிதான் போயிருக்கிறது" என மீண்டும் வலியுறுத்தியும் அவர் சொன்னதையே சொல்லியதால் மக்கள் கடுப்பாகி தியேட்டரை விட்டு வெளியே வந்தனர். இந்த படத்தின் முழு நீளம் 3 மணி நேரம் 56 நிமிடங்களாகும். ஆனால் நீளத்தை குறைத்ததால் 3 மணி நேரம் ஒரு நிமிடம் மட்டுமே படம் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications