Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'பாலியல் உறவு கொள்ளவும், சந்தோஷப்படுத்தவும் பெண் தேவை'.. தாய்லாந்தில் கணவருக்கு வரன் தேடிய மனைவி!

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: வேலைக்கு ஆள் தேவை என விளம்பரம் வெளியிடுவதை போல தனது கணவனுடன் பாலியல் உறவு கொள்ளவும் அவரை சந்தோஷமாக வைத்திருக்கவும் (mistress) படித்த அழகான பெண் தேவை என்று மனைவி வெளியிட்டுள்ள ஒரு சம்பவம் தாய்லாந்தில் நடைபெற்றுள்ளது.

குடும்பத்தில் கணவருக்கு பிடித்த பொருளை மனைவியும், மனைவிக்கு பிடித்த பொருளை கணவரும் வாங்கி கொடுப்பது உண்டு.

ஆனால் தாய்லாந்தில் கணவர் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு மனைவியே வேறொரு பெண்ணை தேடிய சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது. நெட்டிசன்கள் புருவத்தை உயர்த்த வைத்துள்ள இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வருமாறு:-

கணவருக்கு பெண் பார்த்த மனைவி

கணவருக்கு பெண் பார்த்த மனைவி

தாய்லாந்தின் பாங்காங் நகரை சேர்ந்த 44-வயது பெண் பத்திம சம்னன். இவர், அண்மையில் வீடியோ வாயிலாக ஒரு விளம்பரம் வெளியிட்டு இருந்தார். இந்த விளம்பர வீடியோவில், எனது கணவருக்கு உதவியாகவும் அவரை அனைத்து வழியிலும் திருப்திப்படுத்தவும் எனக்கு மூன்று பெண்கள் தேவைப்படுகிறது. காலேஜ் டிப்ளமோ படித்த பெண்ணாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பெண்ணுக்கு மாதம் ரூ. 33ஆயிரத்து 800 சம்பளமாக வழங்கப்படும்.

 கணவர் சந்தோஷமாக இருக்க வேண்டும்

கணவர் சந்தோஷமாக இருக்க வேண்டும்

உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக அளிப்போம். இரண்டு பெண்கள் எனது அலுவலகத்தில் டாக்குமெண்ட் பணிக்காகவும் ஒரு பெண் எனது கணவரையும் கவனித்துக்கொள்ள வேண்டும். எனது குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். எனக்கும் உங்களுக்கும் எந்த வகையிலும் சண்டை வராது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். எனது கணவர் தன்னந்தனியாக மிகக் கடுமையாக உழைக்கிறார். அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.

என்னால் சந்தோஷப்படுத்த முடியவில்லை

என்னால் சந்தோஷப்படுத்த முடியவில்லை

முக்கியமாக குழந்தை இல்லாத பெண் தான் வேண்டும். அழகாகவும் நன்கு பேசவும் தெரிந்து இருக்க வேண்டும். எனது கணவரை திருப்திப்படுத்துவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாகும். அவருக்கு நல்ல பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு தொடர் மன அழுத்தம் இருப்பதாகவும் உடல் ரீதியாகவும் எனக்கு பிரச்சினைகள் இருப்பதால் எனது கணவரை சந்தோஷப்படுத்த என்னால் முடியவில்லை. அவருடன் என்னால் இரவில் உறங்க முடியவில்லை. இதனால், என்னால் நல்ல மனைவியாக இருக்க முடியவில்லை என்ற உணர்வு என்னை வாட்டுகிறது.

33 வயது பெண் தேர்வு

33 வயது பெண் தேர்வு

சம்னான் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், இதை பார்த்த அவரது கணவர் பட்டகோர்ன், இந்த விளம்பரம் தனக்கு வியப்பளிப்பதாக கூறியுள்ளார். அதேவேளையில், தனது மனைவியின் ஆசைக்கு தான் குறுக்கே நிற்கவில்லை என்றும் மனைவியின் ஆசைப்படி நல்ல மிஸ்ட்ரெஸ் கிடைத்தால் சந்தோஷம் தான் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு மத்தியில் சன்மன் தனது கணவரை மகிழ்விக்க 33-வயது இளம்பெண்ணை தேர்வு செய்துவிட்டது தெரியவந்துள்ளது.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

சன்மனின் நெருங்கிய தோழியே இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, தனது கணவனுக்கு பெண் தேடிய விளம்பரத்தை சன்மன் நிறுத்தி வைத்துள்ளார். மூன்று பெண்கள் முதலில் தேவை என்று சன்மன் விளம்பரம் வெளியிட்ட நிலையில் தற்போது ஒரு பெண்ணே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போல் தெரிகிறது என நெட்டிசன்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதேபோல் நெட்டிசன்கள் பலருக்கு இந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+