For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காது அடைக்கும் பசி.. கதறும் பிஞ்சுகள்.. பட்டினி பிடியில் ஆப்கன்.. நாடுகளின் உதவி நாடும் தாலிபன்கள்

நார்வே நாட்டிடம் நிதி உதவி கோருகிறது ஆப்கானிஸ்தான்

Google Oneindia Tamil News

காபூல்: உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு கெத்தாக ஆட்சியை பிடித்த தாலிபன்கள், இன்று உலக நாடுகளிடமே சாப்பாட்டுக்காக கையேந்தும் நிலைமைக்கு ஆளாகிவிட்டனர்..!

ஆப்கானிஸ்தான் நாடு தற்போது உணவு பஞ்சத்தில் சிக்கியுள்ளது. அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பல லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் குளிர்காலத்தில் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!

அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் வருடம் மாதம் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்றது... அவர்கள் நாட்டை கைப்பற்றியதில் இருந்தே பெண்கள் மீதான வன்முறைகள், தாக்குதல்கள், கெடுபிடிகள் அதிகரித்து வருகிறது.

 நிதி நெருக்கடி

நிதி நெருக்கடி

இதற்கு நடுவே நிதி நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் சிக்கி கொண்டது.. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருந்தது அந்த நாடு.. பிறகு நிலைமை மேலும் மோசமானது... ஆட்சியில் அமர்ந்தும்கூட, அரசு ஊழியர்களுக்கு அவர்களால் சம்பளம் கொடுக்கப்படாமல் உள்ளது... இதுபோக மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்திவிட்டன.. உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் பணம் செலுத்துவதையும் நிறுத்தி கொண்டன..

 பசி, பஞ்சம்

பசி, பஞ்சம்

இதனால் அந்த நாட்டில் பசியும், பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. ஒருவேளை சாப்பாட்டுக்காக, தங்கள் வீட்டு பெண் குழந்தைகளை விற்கும் நிலைமைக்கு ஆப்கன் மக்கள் ஆளாகி விட்டனர். இதையெல்லாம் முன்கூட்டியே அறிந்துதான், 3 மாதங்களுக்கு முன்பே ஐநாவும் எச்சரித்திருந்தது.. யாருமே எதிர்பார்த்ததை விட வேகமாக காபூல் வீழ்ச்சியடைந்தது, பொருளாதாரம் அதை விட வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.. குழந்தைகள் எல்லாம் சாக போகிறார்கள்... மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். நிலைமை இன்னும் மோசமாக போகிறது" என்ற தெரிவித்திருந்தது..

 நிதி நெருக்கடி

நிதி நெருக்கடி

இதையடுத்து, மனிதாபிமான செயல்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதற்கெல்லாம் காரணம், ஆப்கானிஸ்தானின் சரியான பொருளாதார திட்டமிடல் இல்லை என்று விமர்சிக்கப்பட்டது.. இப்போது, அமெரிக்கா, இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடம் தலிபான்கள் கையேந்தி நிற்கிறார்கள்.. முடிந்தவரை நாடுகள் ஆப்கனுக்கு உதவினாலும், அவர்களின் உணவுப்பற்றாக் குறையை முழுமையாக தீர்க்க முடியாமல் உள்ளது..

கோதுமை

கோதுமை

அதனால்தான், ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த மாதம் இந்தியா கோதுமையை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.. ஆனால் அதுவரை நிலைமையை அங்கே சமாளிக்க வேண்டிய உள்ளது.. அதனால், தங்களுக்கு உதவுமாறு நார்வே நாட்டிடம் உதவி கேட்டுள்ளர்கள் தாலிபன்கள்.. இது தொடர்பாக தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள்.. மேலும், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் தலைமையில் ஒரு குழு நார்வேவுக்கு நேரடியாகவே சென்றுள்ளது..

குழுக்கள்

குழுக்கள்

இதைதவிர, ஐநாவிடமும் தாலிபான்கள் உணவு கேட்டு குழு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.. ஆசை ஆசையாய் நாட்டை கைப்பற்றியும், தாலிபான்களால் மக்கள் விரும்பும் வகையிலான ஆட்சியை தர முடியவில்லை என்பதுடன், சாப்பாட்டுக்காக மற்ற நாடுகளிடம் கையேந்தும் நிலைமைக்கும் ஆளாகிவிட்டன.. இதில் பரிதாபமாக சிக்கி கொண்டுள்ளது தாலிபனின் அப்பாவி பொது மக்களும், அந்த பிஞ்சுகளும்தான்..!

English summary
Afghanistan crisis: Talks with Taliban in Norway focus on aid
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X