129 பயணிகளுடன் காபூலில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. பத்திரமாக டெல்லி வந்தது

Subscribe to Oneindia Tamil

காபூல் : 129 பயணிகளுடன் காபூலில் இருந்து இன்று மாலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI-244 இரவு 8 மணி அளவில் டெல்லியில் தரையிறங்கியது.

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் வாரத்திற்கு மூன்று முறை விமானத்தை இயக்கி வந்த நிலையில், அது இனி கேள்விக்குறியாகி உள்ளது. இதுதான் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானிற்கு சென்று வந்த கடைசி விமானம் என்று கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றிவிட்ட தாலிபன்கள், தலைநகர் காபூலையும் இன்று கைப்பற்றினர். இதன் மூலம் தாலிபன்கள் வசம் மொத்த ஆப்கானிஸ்தானும் வந்துள்ளது.

8மணிக்கு வந்தது

8மணிக்கு வந்தது

129 பயணிகளுடன் காபூலில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் காபூலில் இருந்து மாலை 6.06 மணிக்கு புறப்பட்டது. இந்த விமான ம இரவு 8 மணி அளவில் டெல்லியில் தரையிறங்கியது.

இந்தியர்கள்

இந்தியர்கள்

முன்னதாக, டெல்லியில் இருந்து இன்று காலை புறப்பட்ட பிறகு, AI-244 விமானம் காபூலில் ஒரு மணிநேர தாமதத்திற்கு பிறகு பாதுகாப்பாக தரையிறங்கியது என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. தாலிபன்கள் காபூலின் புறநகரை அடைந்த காரணத்தால் காபூலின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (ஏடிசி), இந்திய விமானம் தரையிறங்க உதவுதற்கு தாமதம் செய்தது. இதனால் விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறக அங்கிருந்த இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியா வந்தது.

பயணிகள் விமானம்

பயணிகள் விமானம்

இதனிடையே காபூலுக்கான பயணிகள் விமானம் இன்று அதிகாலை ரத்து செய்யப்பட்டது. காபூல் வான்வெளியில் இராணுவ நடவடிக்கை அதிகரித்திருப்பதால், இனி பயணிகள் விமானங்களை இயக்குவது சவாலானது ஆகும்

உளவுத் துறை

உளவுத் துறை

கடந்த வாரம் தான் ஆப்கானிஸ்தானின் காபூல் நகர் தாலிபன்களிடம் இருந்து மூன்று மாதங்களுக்கு தாக்குப் பிடிக்கும் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்திருந்தது. இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்குள்ளும் தலிபான்கள் வந்துவிட்டனர். அமெரிக்க உளவுத் துறை கணிப்புக்கே சவால் கொடுக்கும் வகையில் தலிபான்கள் முன்னேறி உள்ளது.

அஷ்ரஃப் கனி

அஷ்ரஃப் கனி

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில், காபூலை அமைதியான முறையில் ஒப்படைக்கும்படி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமைதியான வழியில் அதிகார மாற்றம் ஏற்படும் வரை காபூல் நுழைவாயில்கள் காத்திக்க தலிபான்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இதனிடையே ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.

Recommended Video

    ஈரக்குலையே நடுங்க செய்யும் துப்பாக்கி சத்தம்.. காபூல் ஏர்போர்ட்டில் ஒரே பரபரப்பு.. பீதியில் மக்கள்.!
    கடுமையான நெருக்கடி

    கடுமையான நெருக்கடி

    இதனிடையே இந்தியாவை போன்று ஆப்கானிஸ்தானுக்கு பல்வேறு நாடுகளும் தங்களின் விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டு மக்கள் தூதுரக அதிகாரிகள் எனப் பலரையும் பாதுகாப்பாக அழைத்துவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தலிபான்கள் ஆட்சி அமைந்துவிட்டால் வேற்று நாட்டவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என்ற அச்சம் இருப்பதால் பல்வேறு நாடுகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+