For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீட்டில் ஆள் இல்லாவிட்டாலும் வீட்டுக்குள்ளேயே டெலிவரி... அசர வைக்கும் அமேசானின் ஐடியா!

அமேசான் நிறுவனம் ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு வித்தியாசமான முறையில் வீட்டுக்குளேயே சென்று டெலிவரி செய்யும் வசதியை ஏற்படுத்த இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வீட்டில் ஆள் இல்லாவிட்டாலும் வீட்டுக்குள்ளேயே டெலிவரி..அமோசன் அதிரடி-வீடியோ

    வாஷிங்டன்: அமேசான் நிறுவனம் ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு வித்தியாசமான முறையில் வீட்டுக்குளேயே சென்று டெலிவரி செய்யும் வசதியை ஏற்படுத்த இருக்கிறது. இதன் மூலம் அனைத்து பார்சல்களையும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

    இதற்காக புதிய தொழிநுட்பம் ஒன்றை உருவாக்கும் முடிவில் இறங்கி இருக்கிறது அமேஸான் நிறுவனம். மேலும் இந்த தொழில்நுட்பத்தில் ஆர்டர்களை பெறவேண்டும் என்றால் அதிக செலவு ஆகும் என்றும் கூறியிருக்கிறது.

    மேலும் இந்த தொழிநுட்பம் அனைவருக்கும் அளிக்கப்படாது அமேசானில் இருக்கும் பிரைம் கஸ்டமர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறது.

     அமேசானின் பழைய முறை

    அமேசானின் பழைய முறை

    பொதுவாக அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளில் ஆர்டர் செய்பவர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆர்டர் செய்த பொருள் எப்போது வீட்டுக்கு வரும் , சரியான தேதியில் வந்துவிடுமா என நிறைய குழப்பங்கள் ஏற்படும். ஆர்டர் செய்துவிட்டு டெலிவரி பையனுக்காக காத்திருப்பது மிக கஷ்டமான செயலாகும். சமயங்களில் சரியான சமயத்தில் இந்த டெலிவரியை பெற்றுக்கொள்ள முடியாமல் ஆர்டர் கேன்சல் ஆகும் நிலையும் கூட ஏற்படுவது வழக்கம். இந்த நிலைக்கு முடிவு கட்ட தற்போது அமேசான் முடிவு செய்துள்ளது.

     வீட்டிற்குள் வந்து கொடுக்கும் அமேசான்

    வீட்டிற்குள் வந்து கொடுக்கும் அமேசான்

    இதன்படி இனி நம்மிடம் வீடு தேடிவந்து ஆர்டரை கொடுப்பதற்கு பதிலாக வீட்டிற்குள்ளேயே வந்து ஆர்டரைக் கொடுக்கும் முறையை ஏற்படுத்த இருக்கிறது. இந்த வசதியை பெறுவதற்கு முன் நம்மிடம் இதற்கான அனுமதியை அமேசான் நிறுவனம் பெற்றுக் கொள்ளும். டெலிவரிக்காக காத்திருக்கும் பிரச்சனையை இந்த முறை போக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதன் மூலம் அனைத்து பார்சல்களையும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

     செலவு என்ன

    செலவு என்ன

    ஆனால் இந்த வசதி அனைத்து மக்களுக்கு ஏற்படுத்தி தரப்படமாட்டாது எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த வசதியை பெற வேண்டும்என்றால் அமேசானில் பிரைம் கஸ்டமராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்காக கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சாதாரண டெலிவரி கட்டணத்தை விட இந்த முறையில் டெலிவரி கட்டணம் மூன்று மடங்கு அதிகம் என்றும் கூறியிருக்கிறது.

     எப்படி செயல்படும்

    எப்படி செயல்படும்

    இந்த முறையின் படி நாம் வீட்டில் இல்லாத சமயங்களில் கூட டெலிவரி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முதலில் இந்த வசதியை பெற அமேசானில் 20000 ரூபாய் மதிப்பு உள்ள வைஃபை மூலம் இயக்கக் கூடிய பூட்டை வாங்க வேண்டும் என்று அறிவித்து இருக்கிறார்கள். அதில் கேமரா வசதி இருக்கும் என்பதால் அமேசான் டெலிவரி நபர் மட்டும் அதில் பொருளை போட்டுவிட்டு பூட்டிவிடுவார். பின் நாம் நமக்கு தேவைப்படும் சமயங்களில் அதை வைஃபை மூலம் அன்லாக் செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். இந்த வசதி இந்த வருட இறுதிக்குள் வரும்.

    English summary
    Amazon to launch service that will allow them to deliver whatever you order, inside your own house even when you are not even there. In order to avail this service you have to be Amazon prime customer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X