For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீரென தங்கத்தை வாங்கிக் குவிக்கும் ரஷ்யா.. இது அமெரிக்காவை வீழ்த்த புடினின் அதிரடி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

மாஸ்கோ: அமெரிக்க டாலர் மதிப்பை குறைத்து அந்த நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் ஒரு வேலையில் இறங்கியுள்ளது ரஷ்யா. இதற்காக தங்கத்தை பெருமளவுக்கு வாங்கி குவிப்பதால் விரைவிலேயே தங்கத்தின் விலை அதிகரிக்க கூடும் என்று எச்சரிக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

உக்ரைனில் படைகளை குவித்து இந்த பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்பும் ரஷ்யாவை ஒடுக்க ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஒன்றிணைந்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த நிலையில், அமெரிக்காவோ தனது நட்பு நாடான சவுதி அரேபியாவிடம் பேசி, கச்சா எண்ணை விலையை மளமளவென குறைத்தது.

America-Russia cold war continues: Putin is buying so much gold

கச்சா எண்ணை உற்பத்தி அதிகரித்து அதன் விலை குறைந்ததால், ரஷ்ய கச்சா எண்ணைக்கான சர்வதேச தேவை குறைந்தது. எனெனில் சவுதி அரேபியா உற்பத்தி செய்யும் கச்சா எண்ணையைவிட ரஷ்யாவில் உற்பத்தியாகும் எண்ணை விலை சுமார் மூன்று மடங்கு அதிகம். இதனால் ரஷ்யாவை தடுமாறச் செய்து பார்க்கிறது அமெரிக்கா.

இதனால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வதற்காக, சீனாவுடன் கைகோர்த்துள்ளது ரஷ்யா. தங்கள் நாட்டு எரிவாயுவின் பெரும்பகுதியை சீனாவுக்கு விற்பனை செய்கிறது ரஷ்யா. தனக்கான பாதுகாப்பை உறுதி செய்துகொண்ட ரஷ்யா இப்போது எதிர்தாக்குதலுக்கு தயாராகியுள்ளது. கச்சா எண்ணை விலை குறைந்தது, அமெரிக்க டாலர் மதிப்பு உயருவது போன்றவை ரஷ்யாவுக்கு எரிச்சலை தந்துள்ளது.

எனவே தங்கத்தை பெருமளவுக்கு வாங்கி குவிக்க தொடங்கியுள்ளது ரஷ்யா. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரஷ்யா வாங்கி குவித்த தங்கத்தின் மதிப்பு 55 மெட்ரிக் டன். இந்த ஆண்டில் மொத்தம் 150 மெட்ரிக் டன் தங்கத்தை ரஷ்ய மத்திய வங்கி வாங்கி இருப்பு வைத்துள்ளது. தங்கத்தை தேவைக்கேற்ப அதிகமாக உற்பத்தி செய்து விட முடியாது. அதே நேரம் மார்க்கெட்டில் புழங்கும் தங்கத்தின் அளவை இதுபோல கொள்முதல் செய்து குறைக்க முடியும்.

கொள்முதலை அதிகரித்தால் தங்கத்தின் சந்தையில் தங்கத்தின் டிமாண்ட் அதிகரித்து அதன் விலை தானாக அதிகரிக்கும். எனவே தங்கத்தில் முதலீடு செய்ய உலகமெங்கும் ஆர்வம் அதிகரிக்கும். இதனால் அமெரிக்க டாலர் பத்திரங்களில் முதலீடு குறைந்து டாலரின் மதிப்பு வீழ்ச்சியடையும்.இதன்மூலம் அமெரிக்காவை தடுமாறச் செய்து தனது பழியை தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறது ரஷ்யா.

English summary
With all of its income from selling oil Russia is diversifying its reserves by buying massive amounts of gold, said William Rhind, CEO of the World Gold Trust Services.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X