For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கை, கால்களை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் நடனத் துறையில் சாதிக்கும் இளம்பெண்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், கை, கால்களை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து நடனம் ஆடி சாதனை புரிந்து வருகிறார்.

அமெரிக்காவின் ஆரெகான் மாநிலத்தில் உள்ல போர்ட்லாண்டை சேர்ந்தவர், கியெரா ப்ரிங்க்லி.

இவர் இரண்டு வயது சிறுமியாக இருந்த போது கடுமையான பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகியதால் இவருடைய கால், கைகளை டாக்டர்கள் அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சக்கர நாற்காலி வேண்டாம்:

தனது சகோதரி உரையாவுடன் சேர்ந்து பள்ளிப் படிப்பை முடித்த கியெரா, சோர்ந்து போய் சக்கர நாற்காலியே கதி என்று இருந்து விடவில்லை.

நடனத்தில் அசத்தல்:

நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட தனது சகோதரியின் நடனத்தை பார்த்து அதில் ஈர்ப்பு ஏற்பட்டு துண்டிக்கப்பட்ட கை, கால்களின் உதவியுடன் அவருக்கு நிகராக நடனம் ஆடி அசத்தி வருகிறார்.

நர்ஸ் ஆவது கனவு:

ஒரு நர்ஸாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறும் கியெரா அதற்கான காரணமாக குறிப்பிடுவது நெஞ்சை நெகிழச் செய்கிறது. "நான் பல முறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, நிறைய பேர் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள்.

நன்றிக்கடன்:

இப்போது, அந்த நன்றிக் கடனை எல்லாம் திருப்பி செலுத்தும் விதமாக அவர்களுக்கு எல்லாம் உதவிடும் வகையில் நர்ஸாகி சேவை செய்ய விரும்புகிறேன்" என்று இவர் கூறுகிறார்.

English summary
American girl amputee her legs and hands but still she is dancing by her inner scope. She wants to become a Nurse in future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X