For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”7 கோடி வட போச்சே” – லாட்டரியில் விழுந்த பரிசை இழந்த அமெரிக்கர்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் சவுத் குயின் தெருவில் உள்ள ஒரு கடையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரே மாதிரியான எண்களைக் கொண்ட 25 லாட்டரி சீட்டுகளை 6000 ரூபாய்க்கு அமெரிக்கர் ஒருவர் வாங்கினார்.

லாட்டரி சீட்டின் குலுக்கல் முடிந்தவுடன் தன்னிடம் இருந்த சீட்டுக்களின் எண்களை தவறாக புரிந்து கொண்டு இந்த சீட்டுகளுக்கு பரிசு விழவில்லை என்ற கோபத்தில் அவற்றை குப்பையில் போட்டு விட்டார்.

லாட்டரி குலுக்கல் முடிவு குறித்து அவரிடம் கடை பணிப்பெண் கேட்டபோது அவற்றை குப்பையில் போட்டு விட்டதாகக் கூறியதால் 7 கோடியை கோட்டை விட்டுவிட்டார்.

ஹையோ 7 கோடி

பென்சில்வேனியாவில் உள்ள லாட்டரி சீட்டு நிர்வாக அலுவலகம் கடந்த பிப்ரவரியில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் குறிப்பிட்ட எண்களைக் கொண்ட 25 லாட்டரி சீட்டுகளுக்கு தலா 30 லட்சம் வீதம் மொத்தம் 7 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது என்றது.

வந்து வாங்கிகோங்க:

மேலும்,அந்த லாட்டரி சீட்டுகளை வாங்கியவர்கள் மார்ச் 13ந் தேதிக்குள் உடனடியாக அலுவலகத்திற்கு வந்து பரிசுப் பணத்தை பெற்றுக்கொள்ளும்படி கூறியிருந்தது.

குப்பையில் போட்ட மனுசன்:

அந்த அறிவிப்பை கண்ட கடை பணிப்பெண் தங்களுடைய கடையில் லாட்டரி சீட்டுகளை வாங்கிய அமெரிக்கருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அந்த லாட்டரி சீட்டுகளை குப்பையில் போட்டு விட்டதால் அந்த நபரால் பரிசுப் பணத்தை பெற இயலவில்லை.

போச்சே!போச்சே! :

இந்நிலையில் பரிசை பெறுவதற்கான கால அவகாசம் முடிந்ததால் பரிசுப் பணம் முழுவதும் லாட்டரி நிதியத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

English summary
American won 7 crores in a lottery ticket. But, He throws that lottery ticket into dustbin. So, the whole amount refund to that lottery company.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X