சூப்பர் மார்க்கெட்டில் திருட முயற்சி! ஒரு நொடியில் போன இளைஞரின் உயிர்! பிரான்ஸ் வன்முறையில் ஷாக்
பாரீஸ்: பிரான்சில் 17 வயது சிறுவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கொன்றதால் அங்கு தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இந்நிலையில் தான் வன்முறைக்கு நடுவே சூப்பர்மார்க்கெட்டில் நுழைந்து திருட சென்ற இளைஞரின் உயிர் ஒரு நொடியில் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகில் நான்டர் எனும் இடம் உள்ளது. இந்த பகுதிக்கு அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த 17 வயது நேல் என்ற சிறுவன் சென்றார். அப்போது அவன் போக்குவரத்து விதிமீறியதாக குற்றம்சாட்டி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் நேல் உடலில் கண்டு பாய்ந்தது. இதனால் அவன் சுருண்டு விழுந்தான். மேலும் சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவன் இறந்தான்.
இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் செயலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை தொடங்கினர். பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்கள், போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், போலீசார், பாதுகாப்பு படையினர் இடையே கடும் மோதல் உருவாகி உள்ளது.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அமைதி காக்க வேண்டும் என பொதுமக்களிடம் கூறினாலும் கூட இந்த வன்முறை சம்பவங்கள் இன்னும் நிற்கவில்லை. இதில் 150க்கும் அதிகமான போலீசார், ஏராளமான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். 700க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்தும் வகையில் நான்டர் உள்பட பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் வன்முறை குறித்து புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தான் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரான்சின் வடமேற்கு பகுதியில் வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து திருட முயன்ற 20 வயது இளைஞர் இறந்தார்.
இவர் சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரையில் ஏறி உள்ளே நுழைய முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கூரையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்திலேயே சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. அவரது உடல் பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications