அன்புமணி 4 சிஎம்! கத்தார் உலக கோப்பை மேட்சில் ஜொலித்த பேனர்! கொண்டாடும் பாட்டாளி மக்கள் கட்சியினர்!
தோஹா : கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் 'அன்புமணி 4 சிஎம்' என்ற பதாகையை தாங்கிப் பிடித்த புகைப்படம் மற்றும் வீடியோவை பாட்டாளி மக்கள் கட்சியினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் கட்சியில் எதிர்கால நலன் கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலைவராக பதவியேற்றார்.
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் பல வியூகங்களை வகுக்க பாமக தரப்பு தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் பல்வேறு நிலைகளில் சீர்திருத்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாமக
நாடாளுமன்ற தேர்தலில் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி சேரும் என விவாதங்களும் எழுந்திருக்கிறது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தான் அன்புமணி சிந்தித்து வருவதாக கூறுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகிகள் சிலர் நாடாளுமன்றத் தேர்தலை வியூகம் அமைப்பதற்கான ஒரு பகுதியாகவே நினைக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையிலான ஆட்சி அமைப்பது அன்புமணியின் இலக்கு. அதற்காக பல்வேறு நிலைகளில் நிர்வாகிகள் தொண்டர்களை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் பாமக நிர்வாகிகள்.

அன்புமணி4சிஎம்
தற்கான பணிகளும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் தென் மாவட்டங்களிலும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கும் அன்புமணி வட மாவட்டங்களைப் போல தென் மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என எண்ணுகிறார். இதற்காக இளைஞர் படையும் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பாமகவினர் சமூக வலைதளங்களில் அன்புமணி4சிஎம் என சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.

உலககோப்பை கால்பந்து
இந்நிலையில் கத்தாரில் நடைபெறும் உலககோப்பை கால்பந்து போட்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்று 'அன்புமணி4சிஎம்' என்ற பேனரை உயர்த்தி பிடித்துள்ளதை பாமகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன.

பேனர்
8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக நாக் - அவுட் சுற்றுகள் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தான் கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து போட்டிகளைப் பார்ப்பதற்காக மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் சென்றுள்ளார். போட்டி நடக்கும் போது கால்பந்து மைதானத்தில் 'அன்புமணி4சிஎம்' என்ற பேனரை உயர்த்தி பிடித்துள்ளார். தற்போது அந்த பேனரைத் தான் பாமகவினர் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications