மீண்டும் கொடுமை.. ரஷ்யாவில் மிகப்பெரிய விமான விபத்து.. 5 குழந்தைகள் உட்பட 49 பேரின் கதி என்ன?
மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து 49 பயணிகளுடன் புறப்பட்ட அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் விபத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. டின்டாவுக்கு சென்ற இந்த விமானம், சீனா எல்லையான ஆமுர் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணித்த நிலையில், அவர்களின் கதி என்ன என்பது குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
அண்மையில் இந்தியாவில் அகமதாபாத் நகரில் ஏற்பட்ட விமான விபத்து உலகையே உலுக்கியது. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் ஒரேயொரு பயணியைத் தவிர்த்து 242 பேரும் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் விமானம் விழுந்த மருத்துவக் கல்லூரி கட்டட விடுதியில் இருந்த ஏராளமானோர் பலியாகினர்.

இதனால் விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 260க்கும் அதிகமாக சென்றது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. விமானத்தில் பயணிக்கும் பலருக்கும் இந்த விபத்து ஒரு அச்சத்தையே ஏற்படுத்தியது. இந்த விமான விபத்திற்கான காரணம் குறித்த விசாரணை அறிக்கை இதுவரை வெளியாகவில்லை.
இந்த விமான விபத்தின் சுவடுகளே இன்னும் மக்கள் மனதில் இருந்த மறையாத நிலையில், ரஷ்யாவில் அடுத்த விமான விபத்து நிகழ்ந்துள்ளது. ரஷ்யாவில் இருந்து டின்டா பகுதிக்கு அங்கார ஏர்லைன்ன்ஸ் நிறுவனத்தின் ஏஎன் 24 ரக பயணிகள் விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமான டின்டா அருகில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன்பின் ரஷ்யா விமானம் மாயமானதாகக் கூறப்பட்ட நிலையில், அடுத்த சில நிமிடங்களில் சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஆமுர் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது தெரிய வந்துள்ளது. விழுந்து நொறுங்கிய விமான பாகங்களை கண்டறிந்துள்ளனர். இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணித்துள்ளனர்.
இவர்களின் கதி என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. இதனிடையே விமானம் தரையிறங்கும் போது விமானியின் பிழையே விபத்திற்குக் காரணம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே விழுந்து நொறுங்கிய விமானத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட பகுதிக்கு தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
இதில் பலியானோரின் எண்ணிக்கை குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. அகமதாபாத் விமான விபத்தைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் விமான விழுந்து நொறுங்கி இருப்பது விமானத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் அதிகளவிலான விமான விபத்து மற்றும் விமான கோளாறுகள் அரங்கேறி வருவது இந்த அச்சத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications