For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழலை எதிர்த்து போராடிய அன்னா ஹசாரேவுக்கு சர்வதேச நேர்மைக்கான ‘அல்லார்டு பரிசு’

Google Oneindia Tamil News

வான்கூவர்: ஊழலுக்கு எதிராக போராடியதற்காக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேக்கு பிரிட்டிஷ் கொலம்பியா சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச நேர்மைக்கான இந்த அல்லார்டு பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. அவருக்கு ஊழலை எதிர்த்து போராடியதற்காக, ஒரு லட்சம் டாலர் (ரூ.62 லட்சம்) பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Anna hazare

கனடா நாட்டின் வான்கூவர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் கொலம்பியா சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச நேர்மைக்கான இந்த அல்லார்டு பரிசும் தர்ந்து கௌரவிக்கப் பட்டது. பொதுவாக ஊழலை எதிர்த்து போராடுபவர்கள் மற்றும் மனித உரிமைக்காக போராடுபவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருவது வழக்கம்.

விருது வழங்கும் விழாவில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பேசியதாவது, ‘எனக்கு பணம், சொத்து மீது ஆசை இல்லை. இருப்பினும், இந்த பரிசை பெற்றதன் மூலம், ஊழலுக்கு எதிரான எனது வாழ்நாள் போராட்டம் மேலும் வலிமை அடையும். இந்த சர்வதேச அங்கீகாரம் மூலம் மாற்றத்துக்கான இயக்கம் வலுப்பெறும்' எனத் தெரிவித்தார்.

இந்த விருதுக்காக சுமார் 48 நாடுகளைச் சேர்ந்த 100 பேர் நடுவர் குழுவின் பரிசீலனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Social crusader Anna Hazare has won $1,00,000 Allard prize for international integrity, instituted by the University of British Columbia's (UBC) law alumnus Peter A Allard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X