LEGO show: அம்மாடியோவ்.. வாய் பிளக்க வைக்கும் லெகோ சிட்டி.. வீடியோ
சிகாகோ: இன்றைக்கு குழந்தைகள் இருக்கும் வீட்டில் கட்டாயம் ப்ளாக்ஸ் (building blocks) இருக்கும். அந்த அளவுக்கு அது பிரசித்தி பெற்று விட்டது.
லெகோ என்பது, டென்மார்க்கைச் சேர்ந்த விளையாட்டுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனமாகும். குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களான பிளாஸ்டிக்கினாலான ஒன்றுடனொன்று பொருத்தக்கூடிய குற்றிகளைத் தயாரிப்பதன் மூலம் பெரிதும் அறியப்பட்ட நிறுவனம் இது.
சரி அது உருவான சுவாரஸ்யமான வரலாறு உங்களுக்குத் தெரியுமா.

லெகோ உருவான வரலாறு
லெகோ இன்றிருப்பதைப்போல், எக்காலத்திலும் உயர்தரமானதாக இருந்ததென்று சொல்லிவிடமுடியாது. டென்மார்க்கிலுள்ள, பில்லண்ட் என்னுமிடத்தில், ஓலே கிர்க் கிறிஸ்டியன்சென் என்னும் ஏழைத் தச்சன் ஒருவரின் பட்டடையில் மிக எளிமையாக இது சின்ன சின்ன மரக்கட்டைகளில் தான் முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.

புதுமையான முயற்சி
இந்தப் புதுமையான சின்ன முயற்சி பெரிய தொழிலாக இன்று வளர்ந்து, உலகின் மிகவும் மதிக்கப்படுகின்ற விளையாட்டுப் பொருள் நிறுவனங்களில் ஒன்றாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர் 1934ல் கிறிஸ்டியன்சென்னால் உருவாக்கப்பட்டது. "நன்றாக விளையாடு" என்னும் பொருளையுடைய, டேனிஷ் மொழித் தொடரான leg godt என்பதிலிருந்து பெறப்பட்டதே "LEGO" என்னும் வணிகப் பெயர்.

லெகோ ஷோ
இந்த லெகோ நிறுவனம் தனது விளையாட்டுக்களை வைத்து வருடந்தோறும் பெரிய ஷோக்களை பெரு நகரங்களில் நடத்துகிறது. அந்த ஷோவில் என்ன என்ன இருக்கிறது என்றால் இந்த சின்ன சின்ன லெகோ எல்லாம் அழகான ஓவியங்களாக, மிகப் பெரிய போர்க்கப்பலாக, ஓடும் ரயிலாக , கிறிஸ்துமஸ் மரமாக , ஸ்நொவ் மானாக , வகை வகையான வண்டியாக என பல்வேறு உருவங்களை லெகோவில் செய்து அசத்துகிறார்கள்.
பிரமிக்க வைக்கும் உருவங்கள்
அது மட்டுமா அந்தந்த நகரத்தின் பிரசித்தி பெற்ற பெரிய பெரிய கட்டடங்கள், புகழ்பெற்ற கோவில் கோபுரம் , பெரிய கடைத்தெரு,வணிக வளாகங்கள் என ஒரு நகரின் முக்கிய இடங்கள் எல்லாம் குட்டி லெகோவால் செய்யப்பட்டு பெரிய உருவங்களாக எழுந்து நிற்பதை பார்க்கும்போது நமக்குள் இருக்கும் குழந்தையையும் அதைத் தாண்டிய கொஞ்சம் பிரமிப்பும் கட்டாயம் எட்டிப் பார்க்கும். நீங்களும் இந்த வீடியோவில் லெகோ சிட்டி யின் அட்டகாசத்தை கண்டுகளிக்கலாம் .
- Inkpena சஹாயா
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications