For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோசடி மன்னன் மெகுல் சோக்சியை கடத்தியது இந்திய அதிகாரிகளா? தீவிர விசாரணையில் ஆன்டிகுவா.. முழு தகவல்

Google Oneindia Tamil News

ஆன்டிகுவா: மோசடி மன்னன் மெகுல் சோக்சியை இந்திய அதிகாரிகள் நாடு கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என ஆன்டிகுவா பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்த முக்கிய வைர வியாபாரிகளில் ஒருவர் மெகுல் சோக்சி. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,578 கோடி ரூபாயை மோசடியான ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகப் புகார் எழுந்தன.

இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடி மன்னன்

மோசடி மன்னன்

இந்த வழக்கின் விசாரணையின் போதே மெகுல் சோக்சி, கரிபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று, தப்பியோடிவிட்டார். இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ஆன்டிகாவில் இருந்து கியூபாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றார். அப்போது மெகுல் சோக்சி டொமினிகா நாட்டில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நேரடியாக நாடு கடத்தும் வழக்கும் டொமினிக்காவில் நடைபெற்று வருகிறது.

திட்டமிட்டுக் கடத்தல்

திட்டமிட்டுக் கடத்தல்

இருப்பினும், மெகுல் சோக்சி ஆன்டிகுவா நாட்டில் திட்டமிட்டு சிலர் இருந்து கடத்தியதாக அவரது வழக்கறிஞர் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இது தொடர்பாக மெகுல் சோக்சி தரப்பிலிருந்து ஆன்டிகுவா போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுன் அறிவித்துள்ளார்,

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "கடத்தல் என்பது கடுமையான குற்றம். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். கடத்தல் என்பது ஆன்டிகுவா நாட்டின் கலாசாரத்தில் இல்லை. எங்கள் நாட்டிலுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கண்டிப்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதேநேரம் மெகுல் சோக்சி மாயமானதற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை"என்று குறிப்பிட்டார். மெகுல் சோக்சி தற்போது காயம் காரணமாக டொமினிக்காவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Recommended Video

    மோசடி மன்னன் Mehul Choksi அதிரடி கைது! Dominicaவில் பிடிபட்டார் | Punjab National Bank
    Array

    Array

    அவர் இந்திய அதிகாரிகள் யாருடைய பெயரையும் தற்போது வரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், தேர்ந்த பயிற்சி பெற்ற சிலர் மிருகத்தனமாக தன்னை கடத்த முயன்றதாக மெகுல் சோக்சி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருக்கும் கணக்குகள் குறித்த எந்தத் தகவலையும் யாரிடமும் கூறக் கூடாது என்றும் இல்லையென்றால் இந்தியாவுக்குத் திரும்பும்போது மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தன்னை கடத்தியவர்களில் ஒருவரான நரேந்திர சிங் மிரட்டியதாகவும் மெகுல் சோக்சி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Antigua and Barbuda have launched an investigation into allegations of the abduction of Mehul Choksi from the country on May 23. Choksi complaint references the Indian chief agent for abduction.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X