For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதியில் முதன்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி... உலக நாடுகள் பாராட்டு!

ஒரு வழியாக சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்கள் வாகனம் ஓட்டுவற்கு அந்த நாட்டு மன்னர் அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

ரியாத் : சவுதி அரேபியாவில் பெண்களும் வானகம் ஓட்டுவதற்கு அந்த நாட்டு மன்னர் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடந்த 1990 முதலே சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி கிடையாது. மத செயல்பாடுகளுக்கு எதிரான செயல் இது என்பதால் தொடர்ந்து இந்த உரிமை மறுக்கப்பட்டு வந்தன. சவுதி அரேபியாவில் தற்போதுள்ள சட்டத்தின்படி ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. பொது வெளியில் வாகனம் ஒட்டிச் செல்லும் பெண்கள் கைது செய்யப்படவும், அபராதம் விதிக்கப்படவும் கூட வாய்ப்பு உள்ளது.

இந்த சட்ட நடைமுறையால் பல குடும்பங்களும் தங்கள் வீட்டு பெண்கள் பயணம் செய்ய தனியார் ஓட்டுனர்களை பணியில் அமர்த்துகின்றனர்.
சவுதியில் உள்ள உரிமைகள் குழுக்கள், பெண்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டுமென கோரி பல ஆண்டுகளாக பிரச்சா செய்து வந்தன.

 2018 முதல் அமல்

2018 முதல் அமல்

இந்நிலையில் பெண்களும் வாகனம் ஓட்ட அனுமதி அளிக்க மன்னர் முகமது பின் சல்மான் முடிவு செய்துள்ளார். இது குறித்த அரசாணை 30 நாட்களில் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறும் என்றும் 2018 ஜூன் முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவாங்கா ட்ரம்ப் பாராட்டு

சவுதியின் அறிவிப்பு குறித்து இவாங்கா ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையை சவுதி அரேபியா அறிவித்துள்ள இன்றைய தினம் வரலாற்றில் மிக முக்கியமான நாள் என்றும் அவர் கூறியுள்ளார்.

 அமெரிக்க தூதர் மகிழ்ச்சி

அமெரிக்க தூதர் மகிழ்ச்சி

சவுதி அரேபியாவின் இந்த முடிவிற்கு அமெரிக்க தூதரான இளவரசர் காலித் பின் சல்மான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைப் போல சவுதியிலும் இனி பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு இது என்றும் அவர் பாராட்டியுள்ளார். சவுதி அரேபியாவின் இந்த முடிவிற்கு அமெரிக்க தூதரான இளவரசர் காலித் பின் சல்மான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைப் போல சவுதியிலும் இனி பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு இது என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

 கட்டேரஸ் வரவேற்பு

கட்டேரஸ் வரவேற்பு

இதே போன்று ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். நாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் ஆணையை சவுதி பிறப்பிக்க உள்ளது பாராட்டக்கூடிய நடவடிக்கை என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

English summary
Saudi Arabia’s government announced that it will grant women the right to drive cars next year in a major sign of social change for the ultraconservative kingdom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X