சே, இம்ரான் கான் ரொம்ப "மோசம்".. பாதுகாப்பே இல்லை.. பாக். பெண் பகீர் குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் மீது அவர் கட்சியை சார்ந்த பெண் நிர்வாகியே குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் ஐ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் கட்சியில் இருந்து ஆயிஷா குலாலாய் விலகுவதாக அறிவித்தார்.

Ayesha who quits from PIT alleged charges against Imrankhan

கட்சிக் கருத்தில் வேறுபாடுகள் இருந்தால் பிரதிநிதிகள் விலகுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் தனக்கு பல ஆண்டுகளாக இம்ரான் கான் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக ஆயிஷா என்ற பெண் பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இம்ரான் கானின் மோசமான நடவடிக்கையால் அவருடைய கட்சி பெண்களுக்கு பாதுகாப்பில்லாத கட்சியாக மாறியிருக்கிறது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இம்ரான் கான் எனக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பி பாலியல் தொல்லை அளித்து வருகிறார். தற்போது அவரது தொல்லை பொறுக்க முடியாததாலேயே கட்சியிலிருந்து வெளியேறி உள்ளேன் என ஆயிஷா தெரிவித்துள்ளார்.

ஆயிஷாவின் இந்த குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்துள்ள இம்ரான்கான் கட்சியினர், தேர்தலில் போட்டியிட சீட் அளிக்காததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே அவர் இது போன்று புகார் அளித்துள்ளார் என்று கூறியுள்ளனர்.

Imran Khan accused of sending indecent messages to female party workers | Oneindia News

ஆயிஷா முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சியில் சேர முடிவு செய்துள்ளார். அதனாலேயே இத்தகைய குற்றச்சாட்டை கூறி, கட்சியிலிருந்து வெளியேறி உள்ளார் என இம்ரான் கான் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ayesha Gulalai quits PTI, says honour of women not safe because of Imran Khan, and also adds he is harrasing her since 2013 and it is more vigorous now so not able to survuve in the party.
Please Wait while comments are loading...