For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸி,ல் மேலாடை இல்லாமல் பெண்கள் சன் பாத் எடுக்கத் தடை

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியா கடற்கரைகளில் பெண்கள் மேலாடை அணியாமல் சூரிய குளியல் செய்ய தடை விதிக்கப்படுகிறது.

சிட்னி நகரில் உள்ள மாண்டி கடற்கரையில் பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக சூரிய குளியல் எடுப்பது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த பழக்கத்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற ஆண் உறுப்பினர்கள் கருதுகின்றனர். எனவே பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண குளியல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர்கள், இந்த பழக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Ban on topless sunbathing urged for Australian beaches

இந்நிலையில் பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக சூரிய குளியல் எடுப்பதை தடை செய்யும் வகையில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதன் மூலம் மாண்டி, மான்லி, கூகி உள்பட அந்நாட்டில் உள்ள முக்கிய கடற்கரைகளில் பெண்கள் மேலாடை அணியாமல் சூரிய குளியல் எடுப்பது தடை செய்யப்படுகிறது.

ஆனால் அரசின் இந்த முடிவுக்கு நிர்வாணத்தை விரும்பும் பல்வேறு ஆஸ்திரேலிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த சட்டத்தின் மூலம் தங்களுடைய உரிமையும், சுதந்திரமும் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Australia's reputation as a laid-back, easy-going nation of sunworshippers is under threat from a plan by conservatives to force women to cover up on some of the country's most popular beaches.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X