For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெய்ரூட்.. கணித்தபடி நடந்தது.. லெபனானில் வெடித்த புரட்சி.. வீதிக்கு வந்த மக்கள்.. போராட்டம்

கிடங்கு வெடிப்பு காரணமாக மொத்த பெய்ரூட் நகரமே பேரழிவை சந்தித்த நிலையில் லெபனானில் தற்போது மக்கள் புரட்சி வெடித்துள்ளது.

Google Oneindia Tamil News

பெய்ரூட்: கிடங்கு வெடிப்பு காரணமாக மொத்த பெய்ரூட் நகரமே பேரழிவை சந்தித்த நிலையில் லெபனானில் தற்போது மக்கள் புரட்சி வெடித்துள்ளது.

Recommended Video

    பெய்ரூட் விபத்து எதிரொலி.. லெபனானில் வெடித்தது மக்கள் புரட்சி

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு காரணமாக அங்கு மோசமான பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை சரி செய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறார்கள்.. இதுவரை 137 பேர் இந்த பயங்கர வெடிப்பில் பலியாகி உள்ளனர். இதுவரை காயம் அடைந்த 4000 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அந்த நகரமே மிக மோசமான அழிவை இதனால் சந்தித்து இருக்கிறது. மொத்தம் 40 வருடம் இதனால் அந்த நகரம் பின்னோக்கி சென்றுள்ளது.

    எப்படி மோசம்

    எப்படி மோசம்

    இந்த நிலையில் பெய்ரூட் வெடிப்பு காரணமாக கடும் கோபத்திற்கு உள்ளான மக்கள் அங்கு போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள். சாலையில் இறங்கி மக்கள் பெரிய அளவில் போராட்டங்களை செய்து வருகிறார்கள். நேற்று காலை தான் இந்த போராட்டம் தொடங்கியது. சிறிய அளவில் ஆரம்பித்த இந்த போராட்டம் தற்போது மக்கள் புரட்சியாக மாறியுள்ளது.

    என்ன செய்கிறார்கள்

    என்ன செய்கிறார்கள்

    லெபனான் அதிபர் ஹசன் டியாப் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் போராட்டம் செய்ய சென்று உள்ளனர். நேற்று ஆயிரக்கணக்கில் போராட்டக்காரர்கள் கூடிய நிலையில், இன்று மட்டும் 1 லட்சம் பேர் அங்கு போராட்டம் செய்ய கூடி உள்ளனர். நேற்று போராட்டத்தில் நடந்த வன்முறையில், போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினார்கள்.

    நிறைய காரணம்

    நிறைய காரணம்

    இந்த போராட்டத்திற்கு பெய்ரூட் வெடிப்பு மட்டும் காரணம் இல்லை. இன்னும் நிறைய காரணங்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி

    லெபனானில் தொடர்ந்து சரிந்து வரும் பொருளாதாரம்.

    22%ஐ தாண்டிய வேலைவாய்ப்பின்மை.

    வேகமாக சரியும் பணமதிப்பு. நாட்டின் கடன் அதிகரிப்பு.

    அரசின் தொடர் ஊழல்கள்

    மோசமான கொரோனா கட்டுப்பாடு ஆகியவையும் இந்த போராட்டத்திற்கு காரணம் ஆகும்.

    ஆட்சி கவிழும்

    ஆட்சி கவிழும்

    இதனால் தற்போது அங்கு ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மணல் அடெல் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டார். இன்னும் பல்வேறு அமைச்சர்கள் அங்கு ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் லெபனான் பிரதமர் ஹாசன் டியாப் பதவி விலக வேண்டும். அது வரை போராட்டம் நிற்காது என்று மக்கள் கூறியுள்ளனர். இதனால் அங்கு எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம் என்று கூறுகிறார்கள்.

    பின்னணி

    பின்னணி

    பெய்ரூட் நகரத்தில் வெடிப்பு ஏற்பட்ட போதே, அங்கு ஆட்சிக்கு எதிராக புரட்சி வெடிக்க போகிறது என்று பலரும் கருதினார்கள். அதிலும் இந்த வெடிப்பே ஆட்சியை கலைக்கதான். அங்கு இருக்கும் ஆட்சியை மாற்ற இஸ்ரேல், சிரியா போன்ற நாடுகள் செய்யும் சதி இது என்றுதான் புகார் வைக்கப்பட்டது. தற்போது சந்தேகத்தை பூர்த்தி செய்யும் வகையில் அதேபோல் லெபனானில் புரட்சி வெடித்து உள்ளது.

    English summary
    Beirut Blast: People protest against the politicians in Lebonan after the disaster.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X