ஆஃப்கானிஸ்தானில் தற்கொலை படைத் தாக்குதல்.. 40 பேர் உடல்சிதறி பலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆஃப்கானிஸ்தானின் காபூல் நகரில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதும் ஏராளமானோர் உயிரிழப்பதும் வாடிக்கையாகி உள்ளது.

இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சோவியத் படையெடுப்பின் 38வது ஆண்டு விழா நிகழ்ச்சி அங்குள்ள டெபியான் சமூக-கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

40 பேர் உடல்சிதறி பலி

40 பேர் உடல்சிதறி பலி

அப்போது கூட்டத்தின் நடுவே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறின. இதில் 40 பேர் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆஃப்கன் அரசு உறுதி

ஆஃப்கன் அரசு உறுதி

30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனை அந்நாட்டு அரசும் உறுதி செய்துள்ளது.

உயிரிழப்பு அதிகரிக்கும்

உயிரிழப்பு அதிகரிக்கும்

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாகவும் ஆஃப்கன் அரசு தெரிவித்துள்ளது.

தாலிபன்கள் மறுப்பு

தாலிபன்கள் மறுப்பு

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தாலிபன் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை மறுத்துள்ளனர்.

6 பேர் உயிரிழப்பு

6 பேர் உயிரிழப்பு

கடந்த வெள்ளிக்கிழமை ஆஃப்கானிஸ்தானின் உளவுத்துறை அலுவலகம் அருகே ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர் இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடந்திருப்பது மக்களிடையே மரண பீதியை அதிகரித்துள்ளது.

150 பேர் உயிரிழப்பு

150 பேர் உயிரிழப்பு

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 150 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
At least 40 people were killed and dozens 30 others got wounded in multiple blasts at a Shiite cultural centre in Kabul on Thursday, officials said, in the latest deadly violence to hit the Afghan capital.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற