For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாம்பேக்கு பதில் பாம் என்று எழுதிய மூதாட்டி.. ஆஸி. விமான நிலையத்தை ஸ்தம்பிக்க செய்த பார்சல்!

மும்பையில் இருந்து ஆஸி.க்கு சென்ற மூதாட்டி ஒருவர் தன்னுடைய பார்சல் ஒன்றில் பாம் என்று எழுதி சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாம்பேக்கு பதில் பாம் என்று எழுதி ஆஸி. விமான நிலையத்தை ஸ்தம்பிக்க செய்த பார்சல்!

    பிரிஸ்பன்: மும்பையில் இருந்து ஆஸி.க்கு சென்ற மூதாட்டி ஒருவர் தன்னுடைய பார்சல் ஒன்றில் பாம் என்று எழுதி சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார்.

    இவர் பெயர் வெங்கட லட்சுமி என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இவர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன்னுடைய மகள் தேவி ஜோதிராஜை பார்க்க நேற்று சென்றுள்ளார்.

    அவர் தன்னுடன் எடுத்து சென்ற பெரிய கருப்பு நிற பார்சல் பையில் பாம் டூ பிரிஸ்பன் என்று எழுதப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரத்திற்கு அனுப்பப்படும் பாம் என்று இதன் பொருள்.

    மறதி பிரச்சனை

    மறதி பிரச்சனை

    அந்த மூதாட்டிக்கு மறதி பிரச்சனை இருக்கிறது. இதனால் பார்சலை அடையாளம் காண வேண்டும் என்பதற்காக அவர் தனது பையில் இப்படி எழுதியுள்ளார். அவருடைய மகளுக்கு பிறந்த நாள் என்பதால், அதை கொண்டாட அவருக்கு தெரியாமலே, இந்த மூதாட்டி ஆஸ்திரேலியா கிளம்பி இருக்கிறார்.

    புகார்

    புகார்

    இவரது பார்சலில் பாம் என்ற வார்த்தை இருப்பதை பார்த்த சக பயணி ஒருவர் மற்ற பயணிகளுக்கு புகார் அளித்துள்ளார். இது அந்த விமானத்தில் பெரிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது. விமானம் தரையிறங்கியவுடன் இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

    சோதனை செய்தார்கள்

    சோதனை செய்தார்கள்

    விமான நிலைய அதிகாரிகள் அந்த மூதாட்டியை தனியாக அழைத்து சென்று விசாரித்துள்ளனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து அந்த மூதாட்டியின் பையை சோதனை செய்துள்ளனர். அந்த பையில் துணிகளை தவிர வேறு எதுவுமே இல்லை என்றதும் அவர் விடுவிக்கப்பட்டார்.

    விளக்கம் அளித்தார்

    விளக்கம் அளித்தார்

    பையில் ஏன் இப்படி எழுதினீர்கள் என்றதற்கு அவர், பாதுகாப்பு அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளார். அதில் ''நான் பாம்பேயில் இருந்து வருகிறேன். முழுதாக பாம்பே என்று எழுத இடமில்லை. அதனால் பாம் என்று எழுதினேன். கீழே மும்பை என்று சிறியதாக எழுதி இருந்தேன். தேவையில்லாமல் எல்லோரும் பயந்துவிட்டார்கள்'' என்றுள்ளார்.

    English summary
    "Bomb To Brisbane" makes confusion in Australia Airport due Indian Grandma's mistake in Bombay spelling. Police investigated her and released her after knowing that it was not bomb but Bombay.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X