For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடரும் விபத்துக்கள்... எகிப்தில் 2 மினி பஸ்கள் கால்வாயில் கவிழ்ந்ததில் 18 பேர் பலி

Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்தில் இரண்டு மினி பஸ்கள் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 18 பேர் உயிரிழந்தனர்.

உலகில் அதிக சாலை விபத்துகள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக எகிப்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் எகிப்தின் சினாய் பகுதியில் இரண்டு சுற்றுலா பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 38 பேர் பலியானார்கள்.

இந்நிலையில் இன்று காலை எகிப்தின் லுக்ஸர் பகுதியில் இரண்டு மினி பஸ்கள் கால்வாயில் கவிழ்ந்ததில் 18 பேர் பலியானார்கள். மேலும், காயமடைந்த 12 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்தவர்கள் திருமணம் ஒன்றிற்கு சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போது மோதி இரண்டு பேருந்துகளும் நீரில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

English summary
At least 18 people were killed and 12 injured on Tuesday when two buses collided and plunged into a canal in southern Egypt, a health official said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X