For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று கலிபோர்னியா... நாளை நாம்தான்- தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் அமெரிக்க மாகாணம்!

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிலவும் தொடர் வறட்சி காரணமாக தண்ணீர் பிரச்சினையை சமாளிக்கும் விதமாக தண்ணீர் பயன்பாட்டை 25 சதவிகிதம் குறைக்க ஆளுநர் உத்தரவிட்டு உள்ளார்.

இந்த ஆண்டுடன் சேர்த்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பனிப்பொழிவு பொய்த்து போனதால் கலிபோர்னியாவில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது.

California Imposes First Mandatory Water Restrictions to Deal with Drought

அம்மாகாணத்திற்கு தண்ணீர் ஆதாரமாக விளங்கி வந்த, பனிக்கட்டி உருகுவதால் கிடைக்கும் தண்ணீர் அளவு மிகவும் குறைந்து விட்டது. கலிபோர்னியாவின் தண்ணீர் தேவையில் மூன்று பங்கு பனி உருகுதல் மூலமே கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி ஆளுநர் ஜெர்ரி புரவுன் கூறுகையில் ‘‘நாம் 5 அடி பனிக்குமேல் நிற்பதற்கு பதிலாக வெறும் தரை மீது நின்றுகொண்டிருக்கிறோம். இது மிகவும் ஆபத்தான அறிகுறி. கடுமையான பல சட்டங்கள் மூலம் இதை தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது'' என தெரிவித்து உள்ளார்.

இந்த புதிய அறிவிப்பின்படி, கோல்ப் மைதானங்கள், அலங்கார புல்வெளிகள், தொழில் பூங்கா, கல்லறைகள் போன்றவைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நீரின் அளவில் 25 சதவிதம் குறைக்கப்பட்டு உள்ளது.

இதை அமல்படுத்தாதவர்கள் மீது 10 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு அளிக்கப்படும் நீரின் அளவு ஏற்கனவே கடுமையாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்த கட்டுப்பாடுகள் அவர்களுக்கு பொருந்தாது.

அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாடு இல்லாத பொருளாதார வளர்ச்சிக்கான விலையை கொடுக்க ஆரம்பித்திருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி உள்ளார்கள்.

எப்பாடுபட்டாவது இந்தியாவையும் அமெரிக்கா போல மாற்ற துடிக்கும் ஆட்சியாளர்கள் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். இல்லையெனில், மீனினமே அழிந்தபின் தூண்டில் போட்ட கதைதான் மிஞ்சும்!

English summary
Gov. Jerry Brown on Wednesday ordered mandatory water use reductions for the first time in California's history, saying the state's four-year drought had reached near-crisis proportions after a winter of record-low snowfalls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X