3,000 இந்தியர்களை நாடு கடத்திய கனடா.. கை கட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

ஒட்டவா: கனடாவிலிருந்து கடந்த 6 மாதங்களில் சுமார் 3,000க்கும் அதிகமான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர். அந்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த இந்தியர்கள், கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் திருப்பி அனுப்பப்படுவதை, மத்திய அரசு வெறுமென வேடிக்கை மட்டும் பார்ப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு பக்கத்தில் இருக்கும் நாடுதான் கனடா. உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு என்கிற அந்தஸ்தை பெற்றிருந்தாலும்.. அந்நாட்டை வளர்ச்சி அடைய வைக்க.. வேலைக்கு ஆட்கள் கிடையாது. அங்கு மக்கள் தொகை ரொம்ப கம்மி. எனவே அந்நாட்டு அரசு வெளிநாட்டினரை தாரளமாக வரவேற்றது.

Canada Deports Over 3 000 Indians

கனடா சென்ற இந்தியர்கள்

இப்படித்தான் இந்தியர்கள் கனடாவுக்கு சென்றனர். டிரைவராக, மருத்துவ பணியாளர்களாக, செவிலியர்களாக, ஐடி ஊழியர்களாக, பொறியாளர்களாக இந்தியர்கள் கனடாவுக்கு போயிருந்தனர். இவர்களை வைத்து எல்லா வேலையும் வாங்கிவிட்டு.. இப்போது மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது என்று காரணம் சொல்லி.. இந்தியர்களை வெளியேற்றும் வேலையில் இறங்கியிருக்கிறது கனடா.

வெளியே அனுப்பும் கனடா

கனடா பார்டர் சர்வீசஸ் ஏஜென்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த ஆண்டு, முதல் 6 மாதங்களில் மட்டும் கனடாவிலிருந்து 3,323 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர். அதாவது அந்நாட்டு அரசு.. இந்தியர்களை இந்தியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு மக்களை வெளியே அனுப்புவதில் கனடா அரசு ரொம்பவும் சீரியஸாக இறங்கி வேலை பார்த்து வருகிறது.

முதலிடத்தில் இந்தியா

இந்த லிஸ்டில் மெக்சிகோதான் எப்போதும் முதலிடத்தில் இருக்கும். அந்நாட்டை சேர்ந்தவர்களைதான் கனடா அதிக அளவில் வெளியேற்றி வந்தது. தற்போது முதல்முறையாக இந்தியர்கள் இந்த இடத்தை பிடித்திருக்கின்றனர். கடந்த 6 மாதங்களில் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 88% ஆகும். இதே நிலைமை நீடித்தால்.. இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதில் புதிய உச்சம் தொடும் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா இந்த 6-7 மாதங்களில் 1,273 இந்தியர்களை மட்டுமே நாடு கடத்தியிருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது கனடா 3 மடங்கு அதிகமாக இந்தியர்களை அனுப்பி வைத்திருக்கிறது.

காரணங்கள் என்ன?

குடியேற்ற விதிகளை சரியாக பின்பற்றவில்லை, அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபோதும் தொடர்ந்து கனடாவில் வசித்தது, விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பது, விசா மோசடி மற்றும் போலி ஆவணங்களை கொடுத்து ஏமாற்றுவது, குற்றச்செயல்களில் ஈடுபடுவது என இப்படியான காரணங்களால்தான் இந்தியர்களை வெளியேற்றுகிறோம் என கனடா கூறியிருக்கிறது. இந்த லிஸ்ட்டில் இன்னும் 7,669 இந்தியர்கள் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார்கள்.

உண்மை என்ன?

உண்மை என்னவெனில், கனடாவில் உள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் அந்நாட்டு அரசு தோல்வியடைந்திருக்கிறது. இருப்பவர்களுக்கு வீடு கொடுக்க முடியவில்லை, இலவச மருத்துவத்திற்கு நிறைய பணம் செலவாகிறது, இதுபோக அரசின் பணம் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு செலவாகிறது என்று சொல்லிதான்.. இந்த நாடு கடத்தும் வேலையை கனடா செய்திருக்கிறது.

மத்திய அரசு மௌனம்

கனடாவில் இந்தியர்கள் ஒன்னும் சும்மா தங்கியிருக்கவில்லை. அந்நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்திருக்கிறார்கள். ஆனால், கடைசியில் கரும்பு சக்கையை தூக்கி போடுவதை போல.. இந்தியர்களை கனடா தூக்கி வீசியுள்ளது. இது பற்றி மத்திய அரசு வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+