For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா ஜெனரல் மோட்டார்ஸின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவாரா

அமெரிக்கா நிறுவனத்தின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா என்ற பெண் அமெரிக்க கார் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்தியாவின் மற்றொரு பெருமைமிகு தருணமாக இது உள்ளது. மிகப்பெரிய கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக திவ்யா சூர்யதேவரா பதவியேற்கவுள்ளார்.

Chennais Divya Suryadevara appointed as CFO of automobile industry General Motors

நிதி மந்திரவாதி என அறியப்படும் திவ்யா சூர்யதேவரா, தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் உள்ள சக் ஸ்டீவன்ஸ் செப்டம்பர் 1 ம் தேதி ஓய்வு பெறுவதை தொடர்ந்து அந்த பொறுப்பை வகிக்கவுள்ளார்.

திவ்யா சூர்யதேவரா மேரி பார்ராவின் வழியை பின்பற்றுவார். அவர் நிறுவனத்தின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

திவ்யா இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். சென்னை பல்கலை கழகத்தில் வர்த்தக படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளை முடித்து உள்ளார்.

அவர் தனது 22வது வயதில் ஹார்வர்டு பல்கலை கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு எம்பிஏ படித்து முடித்தார்.

முதலில் முதலீட்டு வங்கியான யுபிஎஸ் வங்கியில் முதலில் பணியாற்றிய அவர், பின்னர் ஓராண்டு கழித்து தனது 25வது வயதில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இணைந்தார்.

அதற்கு பின் திவ்யாவின் வாழ்வில் ஒரே ஏற்றம்தான். 2016ஆம் ஆண்டின் கிரெய்ன்ஸ் டெட்ராய்ட் பிஸ்னஸின் 40 வயதுக்கு உட்பட்ட 40 வெற்றியாளர் பட்டியலில் இடம்பிடித்தார் திவ்யா.

திவ்யாவின் அனுபவம் மற்றும் அவரது தலைமையின் பல முக்கிய பாத்திரங்கள் தங்களின் நிதி செயல்பாடுகள் முழுவதும் கடந்த பல வருடங்களாக வலுவான வர்த்தக முடிவுகளை எடுப்பதற்கு மிக நன்றாக அமைந்துள்ளது "என்று ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா தெரிவித்தார்.

இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவரும் மேரி பார்ரா என்ற பெண் ஆவார். கடந்த 2014ம் ஆண்டில் இருந்து அவர் இந்த பதவியில் இருந்து வருகிறார்.

இதேபோன்று தலைமை நிதி அதிகாரியாகவும் ஒரு பெண் இருந்ததில்லை. 39 வயதான கடந்த 2017ம் ஆண்டில் இருந்து இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் நிதி பிரிவின் துணை தலைவராக திவ்யா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai-born Dhivya Suryadevara has been named the Chief Finance Officer of the General Motors, the first woman to get the position in the auto industry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X