ஈரானிலிருந்து உடனே வெளியேறுங்கள்.. தங்கள் நாட்டு மக்களுக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் அவசர மெசேஜ்!
பெய்ஜிங்: ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்கிற சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக ஈரானிலிருந்து வெளியேற வேண்டும் என சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் உத்தரவிட்டிருக்கின்றன.
ஈரான் தனது அணு சக்தியை பெரிய அளவில் வளர்த்து வருகிறது. இது தனக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறும் அமெரிக்கா, உடனே இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியுள்ளது. ஆனால், தாங்கள் அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்றும், மருத்துவ நோக்கங்களுக்காகவே அணு சக்தியை பயன்படுத்துகிறோம் என ஈரான் விளக்கமளித்துள்ளது.

இப்படி இருக்கையில், அணு சக்தி விவகாரம் தொடர்பாக, ஈரான்-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்றும், அதில் நாங்கள் சொல்வதை ஈரான் கேட்க வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். ஆனால், ஈரான் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்தை போடவில்லை. இதற்கிடையில், டிரம்ப் தனது சக்தி வாய்ந்த 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை ஈரான் கடல் பகுதியில் நிலை நிறுத்தி வைத்திருக்கிறார். ஒப்பந்தம் போடவில்லை எனில் தாக்குதல்தான் என எச்சரித்திருந்தார்.
இந்த ஒப்பந்தம் குறித்து இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தனக்கு திருப்தி இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. அதேபோல முன்னெப்போது இல்லாத அளவில் இஸ்ரேலில் அமெரிக்கா தனது போர் விமானங்களை குவித்து வைத்திருக்கிறது.
இதெல்லாம் நிலைமையை பதற்றமாக்கியுள்ளது. எனவே, உடனடியாக தங்கள் நாட்டு குடிமக்கள் ஈரானிலிருந்து வெளியேற வேண்டும் என சீன, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அதேபோல, இஸ்ரேலுக்கு பயணிக்க வேண்டாம் என்றும் ஜெர்மன் தங்கள் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications