For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''எல்லை பதற்றத்துக்கு காரணம் இந்தியாதான்... பல மடங்கு அத்துமீறியது''... வம்பிழுக்கும் சீனா!

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனா-இந்தியா எல்லையில் பதட்டங்களுக்கு மூல காரணம் இந்தியாதான் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தியாவை விட சீனா விட பல மடங்கு அத்துமீறியது என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்திருந்த நிலையில் சீனா இவ்வாறு கூறியுள்ளது.

China has blamed India for tensions on the Sino-Indian border

கடந்த ஜுன் மாதம் கல்வான் எல்லைப்பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் எற்பட்டது. இதனால் கிழக்கு லடாக் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தியாவை விட சீனா விட பல மடங்கு அத்துமீறியது என்று மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

கேரளத்தில் அடங்க மறுக்கும் கொரோனா... இரண்டு பள்ளிகளில் 190 மாணவர்கள், 70 ஆசிரியர்களுக்கு பாதிப்பு!கேரளத்தில் அடங்க மறுக்கும் கொரோனா... இரண்டு பள்ளிகளில் 190 மாணவர்கள், 70 ஆசிரியர்களுக்கு பாதிப்பு!

இந்தியாதான் எல்லையில் அத்துமீறுகிறது என்று சீனா இதற்கு பதில் அளிக்கும் வகையில் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பர்க் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது:- இந்தியா தான் சீனா-இந்தியா எல்லையில் பதட்டங்களுக்கு மூல காரணம். நீண்ட காலமாக, சீனாவின் எல்லையை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இந்தியப் பகுதி எல்லைப் பகுதியில் அடிக்கடி அத்துமீறல் செயல்களை நடத்தி வருகிறது. தொடர்ந்து சர்ச்சைகள் மற்றும் உராய்வுகளை உருவாக்கியது.

ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளைப் பின்பற்றவும், எல்லைப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதியான நடவடிக்கைகளுடன் நிலைநிறுத்தவும் இந்திய தரப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.

English summary
China has blamed India for tensions on the Sino-Indian border
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X