For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவில் 60,000 பேர் “செஞ்சுரி” அடித்த தாத்தா, பாட்டிகள்!

Google Oneindia Tamil News

சீனா: சீனாவில் நூறு வயதை தாண்டி 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக ஜெரோன்டோலாஜிக்கல் சொசைட்டி ஆப் சீனா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இதில் 128 வயதுடைய நபர் ஒருவர்தான் மோஸ்ட் சீனியர் தாத்தா.

சீனாவில் முதுமை குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டுவரும் அந்த அமைப்பானது இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சீனாவில் சுமார் 60,000 பேர் நூறு வயதை தாண்டி ஆரோக்கியமாக வாழ்கின்றனர் எனவும், இதில் பெரும்பாலானோர் கிராம பகுதிகளில் வாழ்பவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

பெண்களும் அடக்கம்:

பெண்களும் அடக்கம்:

மேலும் கணக்கிடப்பட்டுள்ள 58,789 பேரில் பெரும்பான்மையானோர் பெண்களாக உள்ளனர்.

கிராமங்களில் வசிப்பு:

கிராமங்களில் வசிப்பு:

இவர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் பாதிப்படையாத வகையில் உள்ள ஹைனான், குவாங்ஸி, அனியூய் ஆகிய மாகாணங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

90 வயதைக் கடந்தவர்கள்:

90 வயதைக் கடந்தவர்கள்:

அதிலும் ஜியாங்சூ மாகாணத்தில் உள்ள 10 லட்சத்து 40 ஆயிரம் பேரில் 4000த்துக்கும் அதிகமானோர் 90 வயதை கடந்தவர்களாக உள்ளனர்.

வாழ்நாள் மாகாணம்:

வாழ்நாள் மாகாணம்:

இதனால் இந்த மாகாணமே "லேண்ட் ஆப் லாங்கிவிட்டி" என்று அழைக்கப்படுகிறது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம்:

ஆரோக்கியமான உணவுப் பழக்கம்:

மேலும், 100 வயதை கடந்த முதியவர்கள் அனைவரும் தற்போதைய நிலையிலும் வீட்டு வேலைகள் அல்லாது வெளிப்புற வேலைகளையும் கவனித்துக்கொள்வதுடன், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A total of 58,789 centenarians are living in China, and the oldest is 128 years old, the Gerontological Society of China revealed Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X