For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவில் இனி ஒரு குழந்தை திட்டம் இல்லை – வருசத்துக்கு 20 லட்சம் பெத்துக்கலாம்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் இனிஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 34 ஆண்டுகளாக இத்திட்டம் கட்டாயமாக நடைமுறையில் உள்ளது.

மீறி குழந்தை பெற்றால் கடும் அபராதம் விதித்தல் மற்றும் கட்டாய கருக்கலைப்பு செய்யப்படுகிறது. எனவே, அங்கு இளைஞர்களின் பெருக்கம் குறைந்து விட்டது. குறிப்பாக பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்ததால் மணப் பெண் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தற்போது ஒரு குழந்தை திட்டத்துக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எனவே மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்கவும், நாட்டில் மனித வள சக்தியை மேம்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளது. அதன்படி ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகளை கூடுதலாக பெற்றுக்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன் மூலம் தற்போதைய மக்கள் தொகையை விட 11 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
China is preparing for 2 million extra babies a year as a result of a loosening of its "one child" birth limits that will allow more couples to have two children, health officials said Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X