விண்வெளியில் உடலுறுவு வைத்தால் குழந்தை பிறக்குமா? ஆய்வுக்காக குரங்குகளை அனுப்பும் சீனா!விபரீத சோதனை
பெய்ஜிங்: சீனா சார்பில் உருவாக்கப்பட்டுள்ள டியாங்காங் விண்வெளி மையத்திற்கு குரங்குகளை ஆய்வுக்காக அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விண்வெளியில் இந்த உயிரினங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன என்பது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள இந்த திட்டத்தை அந்நாடு செயல்படுத்த இருப்பதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக விண்வெளியில் குரங்குகள் இனப்பெருக்கத்தை மேற்கொண்டால் என்ன ஆகும்? என்பதை கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

விண்வெளி
இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் உலகம் அழிவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அருகில் உள்ள கிரகங்களை காலனிபடுத்தும் பணியை பல நாடுகளும் தொடங்கியுள்ளன. இவ்வாறான முயற்சியில் விண்வெளியில் மனிதர்கள் ஆண்டு கணக்கில் தங்க நேரலாம். இக்காலகட்டங்களில் இனப்பெருக்கம் செய்வதற்கான வாய்ப்பு அதிகம். எனவே புவியீர்ப்பு பூஜ்யமாக இருக்கும் பகுதியில் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்வது சாத்தியமா? என்பதை கண்டறிய சீனா குரங்குகளை விண்வெளிக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டியாங்காங்
இந்த தகவலை 'சவுத் சைனா மார்னிங் போஸ்ட்' எனும் செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கிறது. சீனாவின் மூத்த விஞ்ஞானியான ஜாங் லு இதனை உறுதி செய்திருப்பதாகவும் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. விண்வெளியை பொருத்த அளவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளால் கட்டமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி மையம் ஒன்று இருக்கிறது. ஆனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏழாம் பொருத்தம் இருக்கும் காரணத்தினால் சீனா தனக்கென தனியாக 'டியாங்காங்' எனும் ஒரு விண்வெளி மையத்தை உருவாக்கியுள்ளது.

எலி
இந்த ஆய்வு மையத்திற்குதான் குரங்குகளை சீனா அனுப்ப இருக்கிறது. இனப்பெருக்க நோக்கத்திற்காக தற்போது வரை மீன்கள், நத்தைகள் போன்ற உயிரினங்கள்தான் விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருந்தன. இதனையடுத்து தற்போது குரங்குகள் அனுப்பப்பட உள்ளன. இதேபோல சோவியத் யூனியன் காலத்தில் இனப்பெருக்க நோக்கத்திற்காக 18 நாட்கள் எலிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருந்தன. ஆனால் அவை திரும்ப பூமிக்கு வந்த பின்னர் இனப்பெருக்க முயற்சியில் ஈடுபட்டாலும் புதிய குட்டிகள் பிறக்கவில்லை.

பிரச்னை
எனவே விண்வெளியில் இனப்பெருக்கம் செய்யும்போது ஏற்படும் மாற்றம் என்ன என்பது குறித்து அறிவியல் உலகம் நீண்ட நாட்களாக ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வில் ஒரு பகுதியாகவே குரங்கை சீனா விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது. ஆனால் இதில் பெரும் சிக்கல்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது, விண்வெளியில் இந்த குரங்குகளுக்கு உணவளிப்பதிலும், குரங்கின் கழிவுகளை அப்புறப்படுத்துவதிலும் பிரச்னை இருப்பதால் இது இனப்பெருக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications