For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இருள் ராட்சசனை தேடி ஒரு விண்வெளி பயணம்.. நிலவின் பின்பக்கத்தை ஆராயும் சீனா!

நிலவின் பின்பக்கத்தை ஆராய சீன விண்வெளி ஆய்வுத்துறை முடிவு செய்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நிலவின் பின்பக்கத்தை ஆராயும் சீனா!-வீடியோ

    பெய்ஜிங்: நிலவின் பின்பக்கத்தை ஆராய சீன விண்வெளி ஆய்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக தற்போது பூமியில் இருந்து மிக அதிக அளவில் சுற்றும் வகையில் செயற்கைகோள் ஒன்றை அனுப்பியுள்ளது.

    உலக நாடுகள் எல்லாம் கிட்டத்தட்ட நிலவில் செய்யும் ஆராய்ச்சிகளை கைவிட்டுவிட்டது என்று கூட கூறலாம். ஆனால் இஸ்ரோ நிலவில் தண்ணீர் இருந்தது என்று கண்டுபிடித்த பின் சில ஆண்டுகள் மீண்டும் நிலவில் ஆராய்ச்சிகள் தொடங்கியது. ஆனால் வந்த வேகத்திலேயே நிலவு ஆராய்ச்சி நின்று போனது.

    இப்போது இஸ்ரோ, ஸ்பேஸ் எக்ஸ், நாசா என எல்லோரும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதிலேயே குறியாக உள்ளனர். ஆனால் சீனா நிலவு குறித்த ஆராய்ச்சியில் புதிய திட்டம் வைத்துள்ளது.

    என்ன

    என்ன

    தற்போது சீனா நிலவின் பின் பக்கத்தை ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளது. இதுவரை நிலவின் முன்பக்கத்தை மட்டுமே நாம் ஆராய்ச்சி செய்துள்ளோம். சூரிய ஒளியை பிரதிபலிக்க முடியாத காரணத்தால் நிலவின் பின்பக்கம் முழுக்க முழுக்க இருளாக இருக்கும். இந்த இருளான பகுதியில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக சீனா களத்தில் இறங்கியுள்ளது.

    விண்கலம்

    விண்கலம்

    இதற்காக இன்னும் இரண்டு வருடங்களுக்குள் விண்கலம் ஒன்று அனுப்ப உள்ளது. இந்த விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் மிக அருகில் சென்று ஆராய்ச்சி செய்யும். இது நிலவின் பின்பக்கத்தை மட்டுமே ஆராய்ச்சி செய்யும். அங்கு இருக்கும் தட்பவெப்ப நிலைகளை கருத்தில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டு வருகிறது. இப்போது 70 சதவிகித பணிகள் முடிந்து இருப்பதாக சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.

    உதவி

    உதவி

    ஆனால் நிலவின் பின்பக்கத்தில் இருந்து நேரடியாக பூமியை தொடர்பு கொள்வது கடினம் என்று கூறப்படுகிறது. இப்போது சீனாவின் கைவசம் இருக்கும் செயற்கை கோள்களை வைத்துக்கொண்டு நிலவின் பின்பக்கம் அவ்வளவு எளிதாக ஆராய்ச்சி செய்து முடிவுகளை பூமிக்கு உடனுக்குடன் அனுப்ப முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக சீனா மாஸ் திட்டம் ஒன்றை போட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

    சூப்பர் செயற்கை கோள்

    சூப்பர் செயற்கை கோள்

    தற்போது சீனா மேக்பை பிரிட்ஜ் என்ற செயற்கை கோளை விண்ணில் ஏவியுள்ளது. பூமியில் இருந்து 4,55,000 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த செயற்கைகோள் சுற்றும். இதுவரை எந்த செயற்கைகோளும் இவ்வளவு தூரத்தில் சுற்றியதே இல்லை. இதன் மூலம் நிலவை சுற்றும் செயற்கைகோளுடன் தொடர்பு கொண்டு பூமியுடன் தகவல் பரிமாற முடியும். இது இணைப்பு பாலம் போல செயல்படும் என்பதால் பிரிட்ஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    English summary
    China sent a satellite to research back side of the Moon. The satellite Megapie Bridge will research moon backside.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X