இந்தியாதான் முதலில் எல்லை தாண்டியது.. அவர்கள்தான் தாக்கியது.. சீனாவின் முரணான கருத்து.. பின்னணி!
பெய்ஜிங்: சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள்தான் அத்துமீறி புகுந்து இருக்கிறார்கள்., இந்தியாதான் எல்லையில் முதலில் தாக்குதல் நடத்தியது என்று சீனாவின் வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Recommended Video
இந்தியா - சீனா ராணுவம் இடையே லடாக் எல்லையில் நேற்று இரவு நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேரும் ஒரு ராணுவ அதிகாரியும் வீர மரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இந்த சண்டை நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளது.

அறிக்கையே
இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக தற்போது சீனாவின் வெளியுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், திங்கள் கிழமை இரவு இந்த சண்டை நடந்தது. சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள்தான் அத்துமீறி புகுந்து இருக்கிறார்கள். முறையின்றி இந்தியாதான் எல்லையை மீறி உள்ளே வந்தது. சீன வீரர்களை தூண்டிவிடும் விதமாக இந்தியாதான் அங்கு அத்துமீறியது.

யார் தாக்குதல்
அதோடு இந்திய வீரர்கள் சீன வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனால் இரண்டு நாட்டு வீரர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்திய தரப்புக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை எல்லை மீற கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சூழ்நிலையையே மோசமாக்கும் விதமாக எதுவும் செய்ய கூடாது என்று இந்திய தரப்பிற்கு தெரிவிக்கிறோம்.

தீர்வு
இந்த சண்டையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயன்று கொண்டு இருக்கிறோம். அமைதியை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும். எல்லையில்பேச்சுவார்த்தைகளை நடத்தி அமைதியை கொண்டு வரலாம். அதற்கு சீனா தயாராக இருக்கிறது. இந்தியாவும் பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும், என்று சீனாவின் வெளியுறவுத்துறை அறிக்கையே வெளியிட்டுள்ளது.

என்ன முரண்
கல்வான் பகுதி என்பது இந்தியாவிற்கு கீழ் வரும் பகுதி ஆகும். முழுக்க முழுக்க இந்தியாவிற்கு சொந்தமான பகுதி ஆகும் இது . இங்கு இந்தியா எல்லை மீறியதாக கூறுவதே ஏற்க கூடியதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ராணுவ தரப்பும் தகவல்களும் இதற்கு எதிராகவே இருக்கிறது. சீனாதான் எல்லையில் மீறியது. அங்கு சீனாதான் முதலில் தாக்குதல் நடத்தியது என்று இந்திய தரப்பு கூறியுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications