"ஓவர் டைம்ல" ஜாலியா இருங்க.. குழந்தை, குட்டியா பெத்து தள்ளுங்க.. என்ன இப்படி "இறங்கிடுச்சி" சீனா!
பீஜிங்: இந்தியாவில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த புதிய மக்கள் தொகை கட்டுப்பாடு கொள்கையைக் கொண்டுவருவது குறித்து ஒரு விவாதம் நடைபெறுகிறது. அதே நேரத்தில் மக்கள் தொகை அடிப்படையில் முதலிடத்தில் உள்ள சீனா, அங்கு மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இது கேட்க வித்தியாசமாக இருக்கும், ஆனால் இதுதான் உண்மை. சீனாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் அரசு அனுமதி பெற்றபின், ஊழியர்களை எக்ஸ்ட்ரா டைம் செய்யச் சொல்வதை நிறுத்தி விட்டன.
இதனால் மக்கள் சீக்கிரம் வீட்டிற்குச் சென்று குழந்தைகளை உற்பத்தி செய்யும் "நடைமுறையில் ஈடுபட" முடியும்.

முதியோர் அதிகம்
மக்கள்தொகையைப் பொறுத்தவரை, சீனா பல ஆண்டுகளாக உலகில் முதலிடத்தில் உள்ளது. வளர்ந்து வரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா கடுமையான விதிகளை அமல்படுத்தியதற்கு இதுவே காரணம். அதன் பின்னர் கருவுறுதல் வீதம் சீனாவில் குறைந்தது. இதன் விளைவாக, பெரும்பாலான மக்கள் முதுமையை நோக்கி நகரத் தொடங்கினர். நாட்டின் இளம் தம்பதியினர் கருவுறுதல் வீதத்தை அதிகரிக்கும் வகையில் இந்த விதியில் சில தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, நிறுவனங்கள் இப்போது கூடுதல் நேர வேலைகளை நிறுத்த முடிவு செய்துள்ளன.

சீன நிறுவனங்கள்
சீன தொழில்நுட்ப நிறுவனமான பைடெடன்ஸ் மற்ற இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்தில் தங்கள் பணி நேரக் கொள்கையை மாற்றியுள்ளன. இந்தியாவில் மிகவும் பிரபலமான டிக்டாக் நிறுவனத்தின் ஊழியர்களும் கூட கூடுதல் வேலை நேரம் கிடையாதாம். ஷேரிங் ஆப் மற்றும் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனமும், தொழிலாளர்களுக்கு கூடுதல் நேரத்தை முடித்துவிட்டது.

டிக்டாக் நிறுவனத்திலும் ஓவர் டைம் இல்லை
குறைந்து வரும் கருவுறுதல் வீதத்தை விரைவுபடுத்துவதற்கான அதன் தேசிய நோக்கத்தை அடைய சீனாவுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை அதிகரிக்கும் தேசிய நோக்கத்தை பூர்த்தி செய்வதற்காக கூடுதல் நேர வேலை கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

பணி கலாச்சாரம்
இந்தக் கொள்கை இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் முழுமையாக செயல்படுத்தப்படும். சீன நிறுவனங்களின் பணி கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீன நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணிக்கு வேலை செய்கின்றன. இப்போது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் பணியாளர்களுக்கு பணிகளை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையில் ஒரு நல்ல சமநிலை இருக்கும். மேலும் இளைஞர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் போதுமான நேரத்தை செலவிட முடியும்.

பணிச் சுமையை குறைக்க வேண்டும்
சீன செய்தித்தாள் தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் கருத்துப்படி, இளம் தம்பதிகள் அதிக பணிச்சுமையை உணர்கிறார்கள், இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது. கடந்த ஆண்டு, சீனாவில் தேசிய கருவுறுதல் வீதம் 1.3 என்ற குறைந்த அளவை எட்டியது. இதற்கு முக்கிய காரணம், நிறுவனத்தின் ஊழியர்கள் மற்ற ஊழியர்களுடன் போட்டியிட நிர்பந்திக்கப்படுவதுதான். அதனால் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications