For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்”.. ரூ. 2 கோடி செலவில் சீன விவசாயி செய்த அசத்தல் காரியம்!

இணையத்தின் உதவியுடன் ஒரு விமானத்தையே உருவாக்கியுள்ளார் சீன விவசாயி ஒருவர்.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் சீன விவசாயி ஒருவர் சொந்தமாக விமானம் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார்.

வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த பூண்டு விவசாயி ஜூ யூ. சிறுவயதிலிருந்தே விமானத்தில் பயணிக்க வேண்டும், அதுவும் சொந்த விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது தான் ஜூவின் ஆசை. ஆனால் அவரது குடும்ப சூழல் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

இதனால் தானே ஒரு விமானத்தை உருவாக்குவது என அவர் முடிவு செய்தார். இதற்காக இணையத்தின் உதவியுடன் விமானப் படங்களைச் சேகரித்து ஆய்வு செய்தார்.

[செவ்வக வடிவில் 2 ராட்சச ஐஸ் பாறை.. விஞ்ஞானிகளை உறைய வைத்த வடிவம்.. அண்டார்டிகா அதிசயம்!]

விமானம் உருவானது:

விமானம் உருவானது:

அதன் முடிவில் தன் நிலத்தில் சொந்தமாக ஒரு விமானத்தை உருவாக்கும் நம்பிக்கை அவருக்கு கிடைத்துள்ளது. உடனடியாக களத்தில் இறங்கிய ஜூ, தன் சேமிப்புப் பணமான 3,74,000 அமெரிக்க டாலர்களை கொண்டு, சுமார் 60 டன் இரும்புகளுடன் ஏர்பஸ் ஏ320-யை அச்சு அசலாகப் பிரதிபலித்தது போல் ஒரு விமானத்தை உருவாக்கியுள்ளார்.

நண்பர்கள் உதவி:

நண்பர்கள் உதவி:

விவசாயத்திற்கு இடையே கையூன் என்ற நகரத்தில் ஒரு தொழிற்சாலையில் வெல்டிங் வேலையும் செய்துவந்துள்ளார் ஜூ. எனவே, இந்த விமானத்தை உருவாக்கும் பணி அவருக்கு எளிதாக இருந்துள்ளது. அதோடு, இந்த விமானத்தை உருவாக்க, ஜூவிற்கு அவரது ஐந்து நண்பர்கள் உதவி புரிந்துள்ளனர்.

உணவகமாக மாறும் விமானம்:

உணவகமாக மாறும் விமானம்:

விமானம் அரைகுறையாக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளதால், அது வானில் பறக்கும் அளவிற்கு தரம் வாய்ந்ததாக இல்லை. எனவே, தற்போதைக்கு அந்த விமானத்தை உணவகமாக மாற்ற திட்டமிட்டுள்ளார் ஜூ.

சிவப்புக் கம்பள வரவேற்பு:

சிவப்புக் கம்பள வரவேற்பு:

தனது விமான ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளார் ஜு. தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களை ஒரு எஜமானர்கள் என நினைத்துக் கொள்ளும் அளவிற்கு தனது உபச்சாரம் இருக்கும் என்கிறார் அவர். ஜூ உருவாக்கிய விமானத்தின் இந்திய மதிப்பு சுமார் 2 கோடியே 77 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Chinese youngster wanted to fly airplanes. As time went by and the garlic farmer's dream of flying didn't pan out, he decided to build an airplane instead. The full-scale replica of the Airbus A320 built by farmer Zhu Yue is now nearly finished, permanently taxied on a short piece of tarmac surrounded by wheat fields in northeast China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X