For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கைவிட்ட சீன அரசு!" புலம்பி தள்ளும் இளைஞர்கள்! உக்ரைனில் மீட்பு நடவடிக்கையில் இந்தியா vs சீனா எப்படி

Google Oneindia Tamil News

கீவ்: உக்ரைன் நாட்டில் இருக்கும் இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், அங்குள்ள சீனர்களின் நிலை குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் நாட்டில் 12ஆவது நாளாகப் போர் தொடரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர வெளியுறவுத் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பெரும்பாலான இந்தியர்கள் ஏற்கனவே தாயகம் திரும்பிவிட்டனர்.

இப்படி கூட நடக்குமா! உக்ரைன் போர் எப்படி முடியும் தெரியுமா? யாருக்கு வெற்றி? 5 அதிர்ச்சி பின்னணிகள்!இப்படி கூட நடக்குமா! உக்ரைன் போர் எப்படி முடியும் தெரியுமா? யாருக்கு வெற்றி? 5 அதிர்ச்சி பின்னணிகள்!

ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகள் வழியாக இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த மீட்பு நடவடிக்கையில் இந்திய விமானப்படை விமானங்களும் பயன்படுத்தப்படுகிறது.

 கைவிட்ட சீன அரசு

கைவிட்ட சீன அரசு

இருப்பினும், அனைத்து உலக நாடுகளும் தங்கள் குடிமக்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதா என்றால் இல்லை என்பது தான் கசப்பான பதிலாக உள்ளது. குறிப்பாக உக்ரைன் நாட்டில் சுமார் 6000 சீன மக்கள் உள்ள நிலையில், அவர்களைச் சீன அரசு கைவிட்டுவிட்டதாக உக்ரைனில் சிக்கியுள்ள சீன மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சீன தூதரகமும் தங்களைக் கைவிட்டுள்ள நிலையில், போர் தொடர்ந்து வரும் உக்ரைன் நாட்டில் தாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளதாகச் சீன மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 சீன இளைஞர்

சீன இளைஞர்

இது தொடர்பாக இன்னும் உக்ரைனில் சிக்கியுள்ள 25 வயது சீன இளைஞர் ஒருவர் கூறுகையில், "இங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தூதரகம் தெரிவித்துவிட்டது. இதனால் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம். இப்போது நான் செர்னிஹிவுக்கு வெளியே உள்ள ஒரு சிறிய நகரத்தில் உக்ரைன் குடும்பத்தில் தஞ்சம் அடைந்துள்ளேன். இதேபோல பலரும் தஞ்சமடைந்துள்ளனர் .

 கைவிட்டுவிட்டது

கைவிட்டுவிட்டது

உக்ரைன் முழுக்க சண்டை நடைபெறுவதால் தங்கலால் எதுவும் செய்ய முடியாது எனத் தூதரக அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர். வெளிநாட்டில் சிக்கியுள்ள தங்கள் மக்களைக் காப்பற்ற வேண்டியது நாட்டின் பொறுப்பு தானா? இந்த நடவடிக்கை சீனாவின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. நாங்களும் இங்கிருந்து வெளியேறத் தான் விரும்புகிறோம், ஆனால் இங்கே வாகனங்கள் எதுவும் இல்லை. கார்கள் இல்லை. நடந்து சென்றால் கொல்லப்படுவோமோ என்ற அச்சம் உள்ளது" என்றார்.

 சீனா நிலைப்பாடு

சீனா நிலைப்பாடு

ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. போரை முடித்துவிட்டு அமைதியாகப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் எனப் பல நாடுகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், சீனா, சிரியா உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் ரஷ்யாவுக்குக் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இந்த நாடுகள் ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு ஆதரவாகவே உள்ளனர்.

 சீனர்கள் மீது தாக்குதல்

சீனர்கள் மீது தாக்குதல்

சீனாவின் இந்த நிலைப்பாடு காரணமாக உக்ரைனில் உள்ள சீனர்கள் கடும் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். உக்ரைன் நாட்டில் பல பகுதிகளில் சீனர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறும் ரயில்களில் சீனர்களை ஏற்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் கீவ் நகரில் சூப்பர் மார்கெக்டில் சீன இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது.

Recommended Video

    வான் பகுதியை தடை செய்தால் அவ்வளவு தான்.. மேற்கு உலக நாடுகளுக்கு Putin எச்சரிக்கை
     சீனா பதில்

    சீனா பதில்

    இந்த விவகாரத்தில் தங்கள் மக்களைக் காக்கச் சீனா வெளியுறவுத் துறை பெரியதாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்குலக நாடுகள் பல வாரங்களாகவே உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேற அறிவுறுத்திய நிலையில், போர் தொடங்கும் வரை இதில் சீனா எந்த முடிவையும் எடுக்கவில்லை. விமர்சனங்கள் அதிகரித்தே பின்னரே சிறப்பு விமானங்களைச் சீனா இயக்க தொடங்கியது. இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதாகச் சீனா அறிவித்துள்ளது. இப்போது உக்ரைன் நாட்டில் உள்ள தனது குடிமக்களின் பாதுகாப்பு குறித்து சீனா கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

    English summary
    Chinese nationals felt helpless and abandoned in war torn Ukraine: Chinese stuck in Ukraine after its govt failed to evacuate them safely.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X