For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய பெருங்கடலுக்கு மேல்.. வானில் சிவப்பு, ஊதா கலரில் வெளிச்சம்.. என்னது? விஞ்ஞானிகள் விளக்கம்

Google Oneindia Tamil News

பீஜிங்: இந்திய பெருங்கடலுக்கு மேல் பகுதியில் வானில் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் திடீரென வெளிச்சம் ஏற்பட்டு மின்னியதை பலர் செல்போனில் புகைப்படம் எடுத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் இதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.

உலக நாடுகள் பலவும் விண்வெளிக்கு சாட்டிலைட்களை அனுப்பி வருகின்றன. இவ்வாறு பல சாட்டிலைட்டுகள் நிலவுடன் சேர்ந்து பூமியை சுற்றி வருகின்றன.

எனினும் இந்த சாட்டிலைட்டுகளை விண்ணில் நிலை நிறுத்த ராக்கெட் தேவைப்படுகிறது. இதற்காக ராக்கெட் மூலம் சாட்டிலைட்களை உலக நாடுகள் விண்ணுக்கு அனுப்பி வருகின்றன.

சூரியனை விட்டு விலகும் பூமி.. தமிழகத்தில் கடுங்குளிர் நிலவுமா.. சென்னை வானிலை மையம் பதில் சூரியனை விட்டு விலகும் பூமி.. தமிழகத்தில் கடுங்குளிர் நிலவுமா.. சென்னை வானிலை மையம் பதில்

 செல்போனில் படம் பிடித்த மக்கள்

செல்போனில் படம் பிடித்த மக்கள்

5 முதல் 20 டன் எடை கொண்ட இந்த ராக்கெட்டுகள் விண்ணில் சாட்டிலைட்டுகளை நிலைநிறுத்திவிட்டு அங்கேயே கிடக்கின்றன. சில நேரங்களில் புவி ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு சில ராக்கெட்கள் அல்லது அதன் உடைந்த பாகங்கள் பூமியின் ஏதாவது ஒரு இடத்தில் வந்து விழ நேரிடும். அந்த வகையில் சமீபத்தில் சீனா அனுப்பிய ராக்கெட் ஒன்றி உதிரி பாகங்கள் பூமியில் விழப்போவதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதுவும் இந்திய பெருங்கடல் அல்லது இந்திய எல்லைப்பகுதியில் விழக்கூடும் என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், விண்வெளியில் திடீரென ஒளி பிழம்புகள் தோன்றிய காட்சிகளை வியப்பு அடைந்த பலரும் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் இன்று டிரெண்ட் ஆகி வருகின்றன.

 விண்கற்கள் கூட்டம்?

விண்கற்கள் கூட்டம்?

இந்த வீடியோவில் சிவப்பு, புளு ஆகிய நிறங்களில் ஒளி பிழம்புகளாக மிளிரின. இரவு வானத்தில் திடீரென இப்படி தோன்றியதை பார்த்த மக்கள் தங்கள் செல்போனில் அதை படம் பிடித்தனர். இது விண்கற்கள் கூட்டம் என பலரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆனால் உண்மையில், சீன ராக்கெட்டின் எரிந்த பாகங்கள் ஆகும். இந்தியப் பெருங்கடலில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்த சீன ராக்கெட் பாகங்கள் தான் இப்படி காட்சி அளித்தது தெரியவந்துள்ளது. அமெரிக்க விண்வெளி அமைப்பும் இதை உறுதி செய்துள்ளது.

 விஞ்ஞானிகள் விளக்கம்

விஞ்ஞானிகள் விளக்கம்

சீனாவின் லாங்க் மார்ச் 5பி இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டலத்திற்குள் காலை 10.45 (எம்.டி.டி) மணிக்கு நுழைந்ததாகவும் இந்த ராக்கெட் பாகங்கள் விழும் இடம் மற்றும் சிதைந்து செல்லும் இடம் ஆகியவை குறித்து தகவல்களை சீனாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க விண்வெளி அமைப்பு தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த பலரும் வானில் தென்பட்ட இந்த விநோத வெளிச்சத்தை கண்டனர். பலரும் இதை விண்மீன் திரள்கள் என பேசிக்கொண்ட நிலையில், விஞ்ஞானிகள் உடனடியாக விளக்கம் அளித்தனர்.

 விமர்சனம்

விமர்சனம்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானி கிறிஸ் ஹாட்ஃபீல்ட் தனது டிவிட்டர் பதிவில், சீனாவின் ராக்கெட் மலேசியாவுக்கு மேலே எரிந்தது போல தெரிகிறது. ராக்கெட்டின் உதிரிபாகங்கள் பூமியில் இனி எங்கு விழப்போகிறது என்பதை அறிய காத்திருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். ராக்கெட் பூம்பியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் விவகாரத்தில் சீனா உரிய முறையில் நடந்து கொள்ளவில்லை என்று நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் இதுபோன்ற தகவல்களை முன்கூட்டிய பகிர்ந்து சிறந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அதன் அபாயம் குறித்து முன்கூட்டியே கணிக்க முடியும். இப்படி செய்வதுதான் விண்வெளியின் பொறுப்பான பயன்பாட்டிற்கும், பூமியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முக்கியமானதாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Chinese rocket that reentered earth's atmosphere over the Indian Ocean.Thousands in east and southeast Asia witnessed the alluring show across the night sky.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X