வித்தை காட்டிய போது விபரீதம்.. சர்க்கஸ் மாஸ்டரின் கழுத்தை இறுக்கிக் கொன்ற பெரிய பாம்பு!
மாஸ்கோ: ரஷ்யாவில் பாம்பை வைத்து வித்தை காட்டிய சர்க்கஸ் மாஸ்டர் ஒருவர், அதே பாம்பால் கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு ரஷ்யாவில் ஒரு வீடியோ வேகமாக பரவியது. அந்த வீடியோவில், ஒரு சர்க்கஸ் மாஸ்டர், ஒரு மலை பாம்பை வைத்து வித்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார்.
பாம்பை தனது கழுத்தை சுற்றி இருக்க, அதன் தலையை கையில் பிடித்திருக்கிறார் சர்க்கஸ் மாஸ்டர். திடீரென சரிந்து கீழே விழுகிறார். தனது வலது கையால், தனக்கு நேர்ந்த ஆபத்து குறித்து சமிஞ்யை செய்கிறார்.

இதையடுத்து, அந்த சர்க்கஸில் உள்ள மற்றவர்கள், ஓடிவந்து அந்த பாம்பை சர்க்கஸ் மாஸ்டரின் கழுத்தில் இருந்து விடுவிக்கின்றனர். இருப்பினும் அவர் சுயநினைவு இல்லாமல் தரையில் சரிந்து கிடக்கிறார்.
இந்த வீடியோ அந்நாட்டின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் ஊடகங்களின் செய்திபடி, இந்த சம்பவம் நடந்தது தெற்கு ரஷ்யாவின் டாகஸ்தான் என்பது தெரியவந்துள்ளது.
பாம்பினால் தாக்கப்பட்ட அந்த சர்கஸ் மாஸ்டர் உயிர் பிழைத்தாரா இல்லை மரணமடைந்துவிட்டரா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. காரணம். இதுபோன்ற ஒரு சம்பவம் இங்கு நடைபெறவே இல்லை என டாகஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர.
இருப்பினும் ஊடகங்களின் அறிக்கைப்படி, அந்த சர்கஸ் மாஸ்டர் உயிரிழந்துவிட்டதாகவே தெரிகிறது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications