For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேசிக் கொண்டிருந்தபோது பேன்ட்டிலேயே 'உச்சா' போன கொலம்பியா அதிபர்!

Google Oneindia Tamil News

Colombian President Wets His Pants During Speech
பாரன்குல்லா, கொலம்பியா: கொலம்பியா நாட்டு அதிபர் ஜுவான் மானுவல் சான்டோஸின் உடல் நலம் குறித்து அந்த நாட்டில் ஏற்கனவே பல வதந்திகள் உலா வரும் நிலையில் கூட்டத்தினர் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் பேன்ட்டிலேயே சிறுநீர் போனது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

62 வயதாகும் சான்டோஸ், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான பிரசாரக் கூட்டத்தில் பாரன்குல்லா என்ற நகரில் அவர் கலந்து கொண்டார். அப்போது திரளான மக்கள் முன்பு நின்றபடி அவர் பேசினார்.

பேசிக் கொண்டிருந்தபோதே அவர் திடீரென பேன்ட்டிலேயே சிறுநீர் கழித்து விட்டார். சிறுநீர் கழித்தது கூட தெரியாமல் அவர் தொடர்ந்து பேசியபடி இருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி காட்டுத் தீ போல பரவியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டுதான் சான்டோஸ், புராஸ்டேட் புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் அதிக அளவில் வெளியில் நடமாடவில்லை. அவரது உடல் நலம் குறித்தும் அரசுத் தரப்பில் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான் மீண்டும் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இப்போது திரளானோர் கூடியிருந்த கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது பேன்ட்டிலேயே சிறுநீர் கழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புராஸ்டேட் புற்றுநோயிலிருந்து 97 சதவீதம் சான்டோஸ் மீண்டு விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் சிறுநீர் கழித்தது கூட தெரியாத அளவுக்கு அவர் தொடர்ந்து பேசியது புதிய சலசலப்பை அங்கு ஏற்படுத்தியுள்ளது. மே 25ம் தேதி கொலம்பியாவின் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

English summary
Questions about Colombian President Juan Manuel Santos' health have been raised after he appeared to wet himself during an election speech. The 62-year-old was giving a talk to supporters in the coastal city of Barranquilla when a dark patch appeared across the politician's beige trousers. Santos, who underwent surgery for prostate cancer in 2012, did not stop the speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X