"நமக்கு இதுதான் கடைசி சந்திப்பு.. குட் பை".. குறுக்கே வந்த கரோனா.. உருக்கமான பிரிவு.. கண்ணீர் வீடியோ
கொரோனா பாதித்த வயதான தம்பதி குட்பை சொல்லி கொண்டார்கள்
Recommended Video
பீஜிங்: "நமக்கு இதுதான் கடைசி சந்திப்பு.. குட் பை" என்று கணவனும் மனைவியும் கண்ணீருடன் விடை பெறும் வீடியோ ஒன்று பலரின் இதயத்தை உருக வைத்துள்ளது.
சீனாவில் பிறந்த குழந்தை முதல் வயதானோர் வரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்... பொதுவாக மிகப்பெரிய இழப்பு, சோகம் ஏற்படும்போதுதான் மனித உயிர்களின் மதிப்பீடுகளும் அதிகமாகும்.
அப்படித்தான் சீனாவில் ஒவ்வொரு மனிதனும் உயிரை காப்பாற்றி கொள்ளவும், அல்லது உயிருக்கு உயிரானவர்களை பிரிய மனமின்றி தவிப்பதும் தினந்தோறும் நடந்து வருகிறது.. வாழுகின்ற ஆசையில் துடித்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், எது தங்களுடைய கடைசி வினாடி என்று தெரியாத துர்நிலை ஏற்பட்டுள்ளது.

கடைசி சந்திப்பு
அந்த வகையில் பலரையும் தாக்கிய கரோனா வைரஸ், வயதான தம்பதி 2 பேரையும் கப்பென பிடித்து கொண்டது.. இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.. பக்கத்து பக்கத்து பெட்டில் படுக்க வைத்திருக்கிறார்கள். நன்கு பழுத்த ஜோடி இவர்கள்.. பல வருட காலம் பிணைப்புடன் அன்னியோன்யமாக வாழ்ந்தவர்கள் போலும்.. ஐசியூ வார்டில் கனத்த இதயத்துடன் பிரியா விடை பெற்றக் கொள்கின்றனர்.

குட்பை
"இதுதான் நம் கடைசி சந்திப்பு, குட் பை' என்று ஒருவருக்கொருவர் சொல்லி கொள்கிறார்கள். இது சம்பந்தமான வீடியோவை வெளியிட்ட நபர், "உண்மையான அன்புக்கு அர்த்தம் இதுதான்.. 80 வயது ஜோடி ஒருவருக்கொருவர் பிரியாவிடை பெற்று கொள்கின்றனர்.. ஒருவேளை இதுவே இவர்களின் கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம்' என்று குறிப்பிட்டிருந்தார்.

கண்ணீர்
இந்த வேதனை வீடியோ பலரையும் கண்கலங்க செய்து வருகிறது.. கண்களில் நீர் வழிய... ஒருத்தருக்கொருத்தர் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டுள்ளதை பார்க்கும்போது, அவர்களின் ஆயிரம் தவிப்புகளை நம்மால் உணர முடிகிறது.. இதில் அந்த வயதான பெண் ரொம்பவும் பலவீனமாக இருக்கிறார்.. அவரால் கணவனுக்கு எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை... மூச்சு திணறி கண்களில் இருந்து நீர் மட்டும் வழிந்தபடியே உள்ளது.
|
உருக்கம்
இந்த வீடியோவை பார்க்கும்போது, உண்மையான காதல் உள்ள இந்த தம்பதிகளை எந்த கோரமான கொரோனாவும் எதுவும் செய்துவிட கூடாதே என்று நமக்கு மனம் பதைபதைக்கிறது. 'கணவன் - மனைவி என்றால் என்ன அர்த்தம்' என்ற தலைப்பில், கண்ணீரால் "குட் பை" சொல்லிக் கொள்ளும் இந்த தம்பதியின் வீடியோதான் நம் இதயத்தை சுக்குநூறாக துளைத்து வேதனையில் ஆழ்த்தி வருகிறது!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications