For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்வையாளர்கள் முன்னிலையில் சகோதரியைக் கடித்துக் கொன்ற ஆண் சிங்கம்

Google Oneindia Tamil News

டல்லாஸ்: டல்லாஸ் மிருகக் காட்சிச் சாலையில் பார்வையாளர்கள் முன்னிலையில் ஆண் சிங்கம் ஒன்று தனது சகோதரியான பெண் சிங்கத்தை கடித்துக் கொன்ற கோடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பொதுவாக விலங்குகளுக்கு இடையே செல்லச் சண்டைகளும், குறும்புகளும் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று தான். அதனைப் பார்வையிடுவதற்காகத் தான் பார்வையாளர்கள் குடும்பம் சகிதமாக மிருகக்காட்சிச் சாலைக்குச் செல்வார்கள்.

ஆனால், விலங்குகளின் விளையாட்டு விபரீதமாகிப் போனால், பார்வையாளர்கள் அரண்டு தானேப் போவார்கள். அப்படித்தான், டல்லாஸ் மிருகக் காட்சி சாலையில் சிங்கங்களின் சண்டையில் பெண் சிங்கமொன்று பரிதாபமாகப் பலியாகியுள்ளது.

சண்டை....

சண்டை....

டல்லாஸில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் ஒரே வயிற்றில் பிறந்த மூன்று ஆண் சிங்கங்கள் மற்றும் இரண்டு ஆண் சிங்கங்கள் ஒரீடத்தில் அடைக்கப் பட்டுள்ளன. ஞாயிறன்று விடுமுறை தினமாதலால் டல்லாஸ் மிருகக்காட்சி சாலையில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அப்போது, சிங்கங்கள் அடைக்கப் பட்டிருந்த பகுதியில் திடீரென மக்கள் அலறும் சத்தம் கேட்டு வனத்துறை ஊழியர்கள் ஓடி வந்துள்ளனர்.

விபரீதம்...

விபரீதம்...

அங்கே, இரண்டு சிங்கங்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளன. முதலில் இறைச்சிக்காக விளையாட்டாக சிங்கங்கள் மோதிக் கொள்கின்றன என நினைத்த ஊழியர்களுக்கு பின்னர் தான் நடக்கும் விபரீதம் புரிந்துள்ளது.

சிகிச்சை....

சிகிச்சை....

ஆண் சிங்கம் தனது ஐந்து வயது சகோதரியான பெண் சிங்கத்தை கழுத்தை கடித்துக் குதறுவதைக் கண்டு திடுக்கிட்ட ஊழியர்கள், விரைந்து பெண் சிங்கத்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மரணம்....

மரணம்....

ஆனால், அங்கு அதனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அது கழுத்தில் கடிபட்டு உயிரிழந்ததை உறுதி செய்தனர். பலியான பெண் சிங்கத்தின் பெயர் ஜோஹாரி.

சிங்கத்தின் கோபம்...

சிங்கத்தின் கோபம்...

இது குறித்து அந்த மிருகக்காட்சி சாலையின் நிர்வாகி கிராமர் கூறுகையில், இரண்டு சகோதர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் என அங்கு ஐந்து சிங்கங்கள் இருந்தன. சிங்கங்கள் கோபமானவை தான். ஆனால், அவை ஒன்றையொன்று தாக்கிக் கொல்லும் அளவிற்கு மோசமானவை அல்ல' எனத் தெரிவித்துள்ளார்.

செல்லப்பிள்ளை....

செல்லப்பிள்ளை....

ஊழியர்களால் செல்லமாக ஜோஜோ எனச் செல்லமாக அழைக்கப் படும் ஜோஹாரி, பழகுவதற்கு இனிமையானதாம். ஜோஹாரியின் மறைவினைத் தொடர்ந்து அனைத்து சிங்கங்களும் தனித் தனி கூண்டில் அடைக்கப் பட்டுள்ளது.

அதிர்ச்சி...

அதிர்ச்சி...

மிருகக்காட்சி சாலைக்கு வந்திருந்த பார்வையாளர்கள் முன் அரங்கேறிய இந்தக் கொடூரத்தால், அங்கு வந்திருந்த மக்கள், குழந்தைகள் ஆகியோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

English summary
A zoo visit in Dallas turned into a 'horrific scene' for visitors on Sunday when a lion killed his 5-year-old sister lioness by "grabbing her from neck" in front of them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X